அதிமுக முன்னாள் அமைச்சர் கொலை
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.சுதர்சனம்கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வீட்டிலிருந்து ஏராளமான நகை, பணத்தையும் கொள்ளைக் கும்பல்திருடிச் சென்றது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டசபைத் தொகுதி உறுப்பினர் கே.சுதர்சனம். இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். முன்புபிற்பட்டோர் நிலத்துறை அமைச்சராக சிறிது காலம் இருந்தவர்.
சுதர்சனத்தின் வீடு பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 2.45 மணிக்கு 6 பேர் கொண்டகும்பல் வந்துள்ளது. வீட்டின் கதவை உடைத்து அவர்கள் உள்ளே புகுந்தனர். அப்போது சப்தம் கேட்டு எழுந்த சுதர்சனத்தின்மகன் சதீஷ் அங்கு வந்தார். கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை கட்டையால் அடித்து தாக்கி அறை ஒன்றில் வைத்துப்பூட்டினர்.
வீட்டின் கீழ் பகுதியில் சப்தம் கேட்டதால் எழுந்து கீழே வந்த சுதர்சனம், கொள்ளையர்களைப் பார்த்ததும் சப்தம் போட்டுள்ளார்.இதையடுத்து அந்தக் கும்பல் சுதர்சனத்தை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த சுதர்சனம் சுருண்டுவிழுந்து பிணமானார்.
இதைத் தொடர்ந்து கொள்ளைக் கும்பல் வீட்டின் உள்ளே புகுந்து அங்கிருந்த நகை, பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேவந்தனர். சுதர்சனம் எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளைர்கள் புகுந்தது தெரிந்ததும் ஊர் மக்கள் ஏராளமான பேர் அங்கே கூடினர்.ஆனால் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி வெளியே வந்த திருடர்கள் பின்னர் அங்கிருந்து தப்பினர்.
சம்பவம் குறித்து அறிந்ததும் காவல்துறை ஐ.ஜி. ஜாங்கிட் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். கொலை மற்றும்கொள்ளையில் ஈடுபட்டவர்கள் இந்தியில் பேசியதாக ஊர் மக்கள் தெரிவிக்கிறார்கள். எனவே அவர்கள் வட இந்தியாவைச்சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுட்டு பிடிக்க ஜெ. உத்தரவு:
இந் நிலையில் சுதர்சனம் படுகொலை செய்யப்பட்டதற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். கொலை மற்றும்கொள்ளையில் ஈடுபட்டவர்களை சுட்டுப் பிடிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கட்சியின் அடிமட்ட அளவிலிருந்து உயர் பதவிக்கு உயர்ந்தவர்சுதர்சனம். கட்சியின் மீதும், கட்சித் தலைமை மீதும் அவருக்குள்ள விசுவாசம், பாசம், நம்பிக்கை மிகவும் சிறப்பானது.
கட்சிக் கட்டுப்பாட்டை மதித்து, கட்சியின் திட்டங்களை தொய்வின்றியும், அயராதும் நிறைவேற்றப் பாடுபட்டவர் சுதர்சனம்.மக்களுக்காக மிகவும் சிறப்பான முறையில் கடமையாற்றி வந்தவர். சுதர்சனத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்குஎனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதர்சனத்தை சுட்டுக் கொன்று, கொள்ளையில் ஈடுபட்டவர்களை சுட்டுப் பிடிக்கவும் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications