ஜெயேந்திரர் ஜாமீன்: நாளை தீர்ப்பு
டெல்லி & காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மேல் முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் நாளைதீர்ப்பு வழங்குகிறது.
சங்கர்ராமன் கொலை வழக்கில் தன்னை ஜாமீனில் விடக் கோரி ஜெயேந்திரர் இரண்டு முறை தாக்கல் செய்த மனுக்களை சென்னைஉயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் சார்பில் மனுத் தாக்கல்செய்யப்பட்டது.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஆர்.சி. லஹோத்தி, நீதிபதி மாத்தூர், நீதிபதி நோயெல்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்விசாரித்தது. ஜெயேந்திரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் நரிமனும், தமிழக அரசு தரப்பில் கே.டி.எஸ்.துல்சியும் ஆஜராகினர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற விசாரணையின் முடிவில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம்தள்ளிவைத்தது. இந் நிலையில் ஜெயேந்திரரின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வெளியிடப்படுகிறது.
மகா பெரியவரின் உதவியாளரிடம் விசாரணை
இந் நிலையில் மறைந்த காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் உதவியாளராக இருந்த வைத்தியநாதன்என்பவரிடம் இன்று காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சிபுரம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காஞ்சிப் பெரியவரின்முன்னாள் சீடர்களான ஐந்து பேரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
இந் நலையில் இன்று பெரியவரிடம் உதவியாளராகப் பணியாற்றிய வைத்தியநாதன் என்பவரிடம் சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications