வங்கி ஊழியர்களின் நூதன போராட்டம்
கோயம்புத்தூர்:
வாராக் கடனை வசூலிக்க கோவை இந்தியன் வங்கி ஊழியர்கள் நூதன போராட்டத்தை நடத்தினர்.
கோவை இந்தியன் வங்கி சார்பில் வாராக் கடன் வசூல் முகாம் நடத்தப்பட்டது. நீண்ட காலமாக
கடன் தொகையை திருப்பிச் செலுத்தாதவர்களிடம் கடனை வசூலிக்க நூதன முயற்சியை மேற்கொள்ள வங்கி நிர்வாகம் முடிவுசெய்தது.
அதன்படி கடன் தொகையை வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் வீடுகளுக்குச் சென்று வீட்டு முன்பு கோஷமிட்டுஆர்ப்பாட்டம் நடத்த முடிவானது.
இதைத் தொடர்ந்து கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வசித்து வரும் ஒருவர் வாங்கிய ரூ. 40 லட்சம் கடன் தொகையைதிருப்பிச் செலுத்தக் கோரி அவரது வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த வங்கி ஊழியர்கள் அடங்கிய குழு கிளம்பியது.
கடன் வாங்கியவரின் வீட்டை அடைந்த வங்கிக் குழு அங்கு கூடி கடனை திருப்பிச் செலுத்தக் கோரி கோஷமிடத் தொடங்கினர்.இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டு அக்கம் பக்கத்தினர் கூடினர். கடன் வாங்கியவரும் என்ன என்று வெளியே வந்து பார்த்துஅதிர்ச்சி அடைந்தார்.
லட்சக்கணக்கில் பணம் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்துவதில் அலட்சியம் காட்டுவது நியாயமா? மக்கள் சேமிப்புப் பணத்தைகடனாகப் பெற்று விட்டு திருப்பிச் செலுத்தாமல் இருப்பதா என்று கூறி வங்கி ஊழியர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து வங்கி ஊழியர்களுக்கும், கடன் வாங்கியவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்துகடனை விரைவில் திருப்பிச் செலுத்துமாறு அறிவுரை கூறி விட்டு வங்கி ஊழியர்கள் கலைந்து சென்றனர்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications