சென்னையில் இன்று நில அதிர்வு ஏற்பட வாய்ப்பு
சென்னை:
![]() |
தமிழக மற்றும் ஆந்திர மாநில எல்லையோர பகுதிகளில் இன்றோ நாளையோ லேசான நில அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளது என்றுசென்னைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த புவியியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் புவியியல் அமைப்பு சார்பில் ஒரு குழு நில அதிர்வு குறித்து ஆராய்சியில் ஈடுபட்டு வருகிறது.இக்குழுவில் டாக்டர் கே.கே.சர்மா, டாக்டர் ராஜேஸ்வர ராவ், டாக்டர் பெரியகாளை ஆகியோர் உள்ளனர்.
இக்குழுவினர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களின் எல்லையோரங்களில் இன்று மாலை ஆறு மணியில் இருந்து நாளை காலை ஆறுமணிவரை ஏதேனும் ஒரு நேரத்தில் நில அதிர்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த நில அதிர்வு 4.5 ரிக்டர் அளவில் இருக்கும்.
இந்த நில அதிர்வை பொதுமக்கள் உணர முடியாது என்று கூறினர்.
இதற்கிடையே இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் பூகம்பவியல் பிரிவு, இந்தியாவின் அந்தமான், நிக்கோபார் தீவுகளில்கடந்த 10 நாட்களாக அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் அதன் தாக்கம் இந்தியாவின் சில பகுதிகளில் அவ்வப்போதுஉணரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அவ்வப்போது நில அதிர்வு உணரப்பட்டு வருகிறது. இருப்பினும்இவற்றால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எனவே பொதுமக்கள் பீதியடைத் தேவையில்லை என்று கூறியது.
மும்பை, ஒரிசாவில் சுனாமி வாய்ப்பு:
இந் நிலையில் மும்பை மற்றும் ஒரிசாவின் கடலோரப் பகுதிகளில் வருங்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் சுனாமிஅலைகள் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக மும்பை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications