சுனாமி: விடுதலைப்புலிகளுக்கு அன்னான் பாராட்டு
கொழும்பு:
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சுனாமி நிவாரணப் பணிகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டு வருவதாகஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோபி அன்னான் கூறியுள்ளார்.
சுனாமி பாதித்த இலங்கையை பார்வையிட வந்துள்ள கோபி அன்னானை, தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த தமிழ்எம்.பிக்கள் சம்பந்தன், கஜேந்திரகுமார், பொன்னம்பலம் ஆகியோர் இன்று காலை ஜெய் ஹில்டன் ஹோட்டலில் சந்தித்துப்பேசினர்.
அவர்களிடம் அன்னான் பேசுகையில்,
விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் சுனாமி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக விடுதலைப் புலிகள் இயக்கத்தை நான் பாராட்டுகிறேன்.
இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளில் சுனாமியால் ஏற்பட்ட கடுமையான பாதிப்பு குறித்து என்னிடம் விரிவாகத்தெரிவிக்கப்பட்டது. தேவைப்படும் உதவிகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
வட கிழக்குப் பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகள், நிவாரண உதவிகள் தடையின்றி செல்ல வேண்டும். இதில் அரசியல்பார்க்கக் கூடாது என்றார் அன்னான்.
அன்னானுக்கு அனுமதி மறுப்பு:
முன்னதாக இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும், சுனாமி பாதித்த பகுதிகளைப் பார்வையிட கோபிஅன்னானுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்தது.
இதுகுறித்து கோபி அன்னானுடன் வந்திருந்த ஐ.நா. சபை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கோபி அன்னான் அரசியல் பயணம் மேற்கொள்ளவில்லை. நிவாரண பணிகளை பார்வையிடுவதற்குத்தான் அவர் வந்துள்ளார்.ஆனால் தமிழர்கள் பகுதிக்கு அவர் செல்ல விரும்பியும் அனுமதி கிடைக்கவில்லை என்றார்.
இது தொடர்பாக கோபி அன்னான் நிருபர்களிடம் கூறுகையில், மனிதாபிமான பயணமாக இங்கு வந்துள்ளேன். சுனாமியால்பாதிக்கப்பட்ட எல்லா பகுதிகளுக்கும் செல்ல விரும்பினேன். ஆனால் நான் இலங்கை அரசின் விருந்தினர் என்பதால்அவர்கள்தான் எனது பயண திட்டத்தை வண்த்தனர் என்று கூறினார்.
நிவாரண பணிகளில் இலங்கை அரசு பாரபட்சம் காட்டுவதாக விடுதலைப்புலிகள் புகார் கூறியுள்ள நிலையில் கோபி அன்னான்தமிழர்கள் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படாதது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இரு மதத்தினர் மோதல்:
இதற்கிடையே கிழக்கு இலங்கையில் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட பகுதியில் இன்று இரு மதத்தினருக்கு இடையேமோதல் ஏற்பட்டது, மோதலின்போது கையெறிகுண்டு வீசப்பட்டதில் 3 பேர் பலியாயினர். மேலும் 37 பேர் காயமடைந்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications