புதுவை கிராமங்களை தத்தெடுக்கும் மகாராஷ்டிர அரசு
பாண்டிச்சேரி:
![]() |
பாண்டிச்சேரி மாநிலத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள சில கிராமங்களை மகாராஷ்டிரா அரசு தத்தெடுத்து வீடுகள் கட்டித்தரும் என்று மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் கூறினார்.
பாண்டிச்சேரியில் சுனாமி அலைகள் தாக்கிய பகுதிகளை விலாஸ்ராவ் தேஷ்முக் பார்வையிட்டார். புதுவை முதல்வர் ரங்கசாமி,மாநில காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி ஆகியோர் அவருடன் சென்றனர். அப்போது நிருபர்களிடம் பேசிய தேஷ்முக்கூறியதாவது:
புதுவையில் பாதிக்கப்பட்ட இடங்களில் மகாராஷ்டிர அரசின் நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. அந்த குழு தரும்அறிக்கையின் அடிப்படையில் எந்தெந்த இடங்களில், எந்த மாதிரியான வீடுகள் கட்ட வேண்டும் என்பது குறித்து திட்டம்வகுக்கப்படும்.
மகாராஷ்டிராவின் லத்தூர் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டபோது, நிவாரணப் பணிகளை மேற்கொண்ட அனுபவம் எங்களுக்குஉள்ளது. குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டபோதும், ஒரிசா கடும் புயலால் பாதிக்கப்பட்டபோதும் சில கிராமங்களைதத்தெடுத்து வீடுகள் கட்டித் தந்துள்ளோம்.
அதேபோல் புதுவைக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் செய்வோம். மும்பை காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதுவைமீனவர்களுக்கு வழங்குவதற்காக வலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
புதுவை மாநிலத்தில் நிவாரணப் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன என்று கூறினார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?













Click it and Unblock the Notifications