அடைக்கலம் தந்த கோயிலில் மது, பிரியாணி விருந்து
நாகப்பட்டனம்:
![]() |
சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து நாகை செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பலர்கோயிலுக்குள்ளேயே குடித்து விட்டு பிரியாணி சாப்பிடுவதாக கோயில் நிர்வாகமும், பக்தர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.நாகையில் உள்ள பிரசித்தி பெற்ற செளந்தரராஜப் பெருமாள் கோயில் மற்றும் நீலதயாட்சி அம்மன் கோயிலும் அதில் ஒன்று.
இந்தக் கோயில்களில் சுனாமி பாதித்த தினத்திலிருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால்கடந்த 26ம் தேதி முதல் இந்தக் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
தினசரி 3 வேளை பூஜை மட்டுமே நடந்து வருகிறது. பூஜை முடிந்ததும் கருவறை மூடப்பட்டு விடும். இந் நிலையில் அடைக்கலம்புகுந்துள்ள மக்களில் சிலர் செய்யும் செயல்களால் கோயில் நிர்வாகமும், பக்தர்களும் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் கூறுகையில், சுனாமி தாக்குதலுக்குப் பிறகு ஏராளமான பொதுமக்கள் இங்கு அடைக்கலம்புகுந்துள்ளனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கோயில் வளாகம் முழுவதும் காணப்படுகின்றனர்.
இங்கேயே குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, சிறுநீர், மலம் கழிப்பது என அனைத்தையும் மேற்கொள்கின்றனர். இதுபரவாயில்லை. சிலர் அரசு கொடுத்த ரூ. 4,000 நிவாரணப் பணத்தில் மது, பிரியாணி வாங்கி வந்து கோயிலுக்குள்ளேயே அதைசாப்பிடுகின்றனர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு நீலதயாட்சி அம்மன் கோயிலில் கோமேத லிங்கம் காணாமல் போனது. தற்போது பொதுமக்கள் அதிகஅளவில் உள்ளதால், இதைப் பயன்படுத்தி திருடர்கள் கோயிலுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட வாய்ப்புள்ளது.
கோயிலை அசுத்தப்படுத்த வேண்டாம் என்று கூறியும் பொதுமக்கள் அதைக் கேட்பதாக இல்லை. கோயில் நந்தவனம் மிகப்பெரிய கழிப்பறையாக மாறி விட்டது. கோயிலில் ஏதாவது காணாமல் போனால் யாரைக் குறை சொல்வது?
10ம் தேதி வரை பொதுமக்கள் இங்குதான் இருப்பார்கள் என்று அரசு கூறியுள்ளது. அதுவரை உண்டியலைப் பாதுகாக்கவேண்டும், கோயிலில் உள்ள மற்ற விலை உயர்ந்த விக்கிரகங்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க வேண்டும்.
தினசரி நூற்றுக்கணக்கான பெண்கள் கோயிலில் விளக்கேற்றி வழிபடுவார்கள். கோயிலைத் திறக்காமல் மூடி வைத்துள்ளதால்எங்களை அவர்கள் திட்டிச் செல்கிறார்கள், சாபமிடுகிறார்கள்.
கோயிலின் புனிதம் காக்கப்பட வேண்டும். அதை இங்கு தங்கியிருப்பவர்கள் உணர வேண்டும் என்றனர் அவர்கள்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications