புதுவைக்கு விஜயகாந்த் ரூ. 3 லட்சம் நன்கொடை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ரூ. 3 லட்சம் நிதியை அம்மாநில முதல்வர்ரங்கசாமியிடம் நடிகர் விஜயகாந்த் வழங்கினார்.
புதுவைக்கு இன்று வந்த விஜயகாந்த் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ரூ.3 லட்சம் நிதியை வழங்கினார். அவருடன் விஜயகாந்த்ரசிகர் மன்ற பொதுச் செயலாளர் ராமு வசந்தன், மாநில செயலாளர் ஜெயக்குமார் மற்றும் புதுவை மாநில விஜயகாந்த் ரசிகர்மன்றத் தலைவர் வி.பி.பி.வேலு உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேசுகையில், கடந்த 27ம் தேதி புதுவைக்குட்பட்ட புதுக்குப்பம் பகுதியைப்பார்வையிட்டேன். தமிழகத்தில் சுனாமி பாதிப்பு நிவாரண நதிக்கு ரூ. 10 லட்சம் கொடுத்தேன். தற்போது புதுவைக்கு ரூ. 3லட்சம் கொடுத்துள்ளேன்.
இலங்கைக்கு ரூ. 6 லட்சம் கொடுத்துள்ளேன். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து நடிகர்களும் உதவிவருகின்றனர். நடிகர், நடிகையரின் கலை நிகழ்ச்சி நடத்தப்படுமா என்பதை நான் மட்டும் முடிவு செய்ய முடியாது.அனைவரையும் கலந்து பேசி முடிவு செய்வோம்.
இந்தி நடிகர் விவேக் ஓபராய் தேவானம்பட்டினம் கிராமத்தை தத்தெடுப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் நமது நடிகர்கள் ஒருகிராமத்தைத் தத்தெடுத்தால் மற்ற கிராமத்தினர் அதை விரும்புவார்கள் என்று கூற முடியாது என்றார் விஜயகாந்த்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications