தமிழக அரசின் பழி வாங்கும் நடவடிக்கை: அத்வானி
டெல்லி:
ஜெயேந்திரர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதை பொறுக்க முடியாமல்தான் தமிழக அரசு விஜயேந்திரரைக் கைது செய்துள்ளதுஎன்று பாஜக தலைவர் எல்.கே.அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.
விஜயேந்திரர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை பாஜக தலைவர்கள் குழு சென்று சந்தித்தது.இந்தக் குழுவில் அத்வானி, ஜஸ்வந்த் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
பிரதமரை சந்தித்து விட்டு வெளியே வந்த அத்வானி செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜயேந்திரரைக் கைது செய்துள்ளதன்மூலம் கடந்த 2,500 ஆண்டுகளாக தங்கு தடையின்றி நடந்து வரும் பூஜைகள், வழக்கமான பணிகள் அனைத்தும் தடைபட்டுப்போகும் என்பதை பிரதமரிடம் எடுத்துக் கூறினோம்.
இந்தப் பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு இந்துக்களின் உணர்வுகளை காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதற்குபிரதமர், இந்துக்களின் மனம் புண்படாத வகையில், இந்தப் பிரச்சினையைக் கையாளுமாறு தமிழக அரசுக்கு நான்கு நாட்களுக்குமுன்புதான் கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன் என்றார்.
ஜெயேந்திரர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதை விரும்பாத தமிழக அரசு அதற்குப் பழி தீர்க்கும் வகையிலேயேவிஜயேந்திரரைக் கைது செய்துள்ளதாக உணர்கிறோம் என்றார் அத்வானி.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications