டிஜிபி கோவிந்த் அதிரடி மாற்றம்: புதிய டிஜிபி அலெக்சாண்டர்
சென்னை:
தமிழக டிஜிபியாக இருந்த கோவிந்த் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக உளவுத் துறை டிஜிபியாக வந்த ஏ.எக்ஸ். அலெக்சாண்டர் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவிந்த்துக்கு டப்பா பதவியான போலீஸ் வீட்டு வசதி வாரிய தலைவர் பதவி தரப்பட்டுள்ளது.
இதுவரை இந்தப் பதவியில் இருந்த நெயில்வால், சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றப்பிரிவு டிஜிபி பதவியையும் அவர்கூடுதலாக கவனித்து வருவார். இவரும் முன்னாள் தமிழக டிஜிபியாக இருந்தவரே என்பது நினைவுகூறத்தக்கது.
இதுவரை அலெக்சாண்டர் கவனித்து வந்த உளவுப் பிரிவு டிஜிபி பொறுப்பை, அத் துறையின்ஐ.ஜியான ராமானுஜம் தற்காலிகமாக கவனித்துக் கொள்வார்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத்தைப் போலவே சங்கராச்சாரியார் விவகாரத்தில் டிஜிபி கோவிந்தின் ஒத்துழைப்பும் அரசுக்குப் பரிபூரணமாகக்கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் சுங்கத்துடன் சேர்த்து கோவிந்தும் மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கிடையே உளவுத் துறையின் தலைவராக இருந்து அதிலிருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள வெங்கடகிருஷ்ணனைபனிஷ்மெண்ட் ஏரியாவாகக் கருதப்படும் மண்டபம் அகதிகள் முகாம் இன்சார்ஜ் ஆக தூக்கியடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்பு அலெக்ஸாண்டர் கூட இந்தப் பதவியில் தான் வைக்கப்பட்டிருந்தார். மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்குப் பின்னரே அவர் மீண்டும் உளவுப்பிரிவுத் தலைவராக நியமனமானார். இப்போது மாநில டிஜிபியாகிவிட்டார்.
சங்கராச்சாரியார் விவகாரத்தைக் கையாளும் முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அனைவரும் படிப்படியாககழற்றிவிடப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ஒரே நாளில் உள்துறைச் செயலாளரும், மாநில காவல்துறைத் தலைவரும் (டிஜிபி) அடுத்தடுத்து மாற்றம் செய்யப்பட்டது கோட்டை வட்டாரத்தில்பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications