நடிகர் அம்ரீஷ் பூரி மரணம்; மன்மோகன் இரங்கல்
மும்பை:
பிரபல இந்தி வில்லன் நடிகர் அம்ரீஷ் பூரி உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மன்மோகன் சிங்இரங்கல் தெரிவித்துள்ளார்.
மூளையில் ரத்தம் உறைந்து, அம்ரீஷ் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு கோமாவில் விழுந்தார். மலேரியாநோயும் அவரைப் பாதித்திருந்தது. கடந்த வாரம் இந்துஜா மருத்துவமனையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந் நிலையில் இன்று காலை அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 72. அம்ரீசுக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். அவரதுஇறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று தெரிகிறது.
வில்லனாக தனது நடிப்புலக வாழ்க்கையைத் தொடங்கிய அம்ரீஷ், பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் தனது முத்திரையைப் பதித்தார்.மிஸ்டர் இந்தியா, தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே, ஹீரோ, ரேஷ்மா ஆகிய படங்கள் நடிப்புத் திறமைக்கு சான்றாக இன்றும்நினைவு கூறப்படுபவை.
தமிழில் தளபதி, பாபா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.
பிரதமர் இரங்கல்:
அம்ரீஷ் மறைவுக்கு மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில்,
அம்ரீஷ் நாடகத்துறையில் தனது முத்திரையைப் பதித்துவிட்டு, இந்தி சினிமாவில் பெரிதும் மதிக்கப்படக்கூடிய நடிகராக உயர்ந்தார். நிஷாந்த் அண்ட் பூமிகா, மிஸ்டர்இந்தியா, சாட்சி 420 ஆகிய படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்தார்.
அவரது மறைவு இந்திய சினிமா மற்றும் நாடகத்துறைக்கு பேரிழப்பாகும் என்று கூறியுள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications