தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய பாஜக கோரிக்கை
சென்னை:
சட்டத்தின் முன் அனைவரும் சமம் முதல்வர் ஜெயலலிதா கூறுவது உண்மை என்றால் பாலியல் புகாருக்கு உள்ளாகியுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் மீது சட்டம் பாயாதது ஏன் என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,
ஜெயேந்திரர் சிறையில் உள்ள நிலையில் விஜயேந்திரரைக் கைது செய்ததால் 2,500 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் சந்திரமெளலீஸ்வரர் பூஜை தடைபட்டு விடும் என பிரதமர் மன்மோகன் சிங் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார்.
அதற்கு பதில் எழுதிய ஜெயலலிதா முற்றிலும் பொய்யான தகவல்களைத் தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்திய ஜெயலலிதா பிரதமரிடமும் பொய்யான தகவல்களை அளித்திருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜெயேந்திரர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறிய சட்ட பிரச்சனைகளுக்குப் பின்னரும் விஜயேந்திரர் சட்டப்படிதான் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறினால் அதை சிறுபிள்ளை கூட நம்பாது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற தமிழக அரசின் நிலையை மக்கள் பாராட்டுவதாக ஜெயலலிதா கூறியிருப்பது கொடூரமான நகைச்சுவையாகும். ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் கோமதி, தளவாய் சுந்தரத்தின் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
தளவாய்சுந்தரம் மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்காத நிலையில் சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் என்று கூறுவது நகைப்பிற்குரியதாகும். இந் நிலையில் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்வதன் மூலமே நீதியை நிலைநாட்ட முடியும் என பாஜக கருதுகிறது என்று கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications