ஜெயேந்திரர் தென் இந்தியாவிலேயே தங்க கூடாது: தமிழக அரசு கோரிக்கை
டெல்லி:
![]() |
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் வரை தென்னிந்தியாவிலேயே ஜெயேந்திரருக்கு இருக்கக்கூடாது என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரத்தில் இன்னொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயேந்திரருக்கு எதிரானஆதாரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
முதல் மனு:
உச்ச நீதிமன்றம் நேற்று முன் தினம் ஜெயேந்திரருக்கு ஜாமீன் வழங்கியது. நீதிமன்ற நிபந்தனைப்படி கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்யப்படும் வரை ஜெயேந்திரர் காஞ்சி மடத்தில் தங்கக் கூடாது. இதனால் அவர் ஆற்காடு அருகே உள்ள கலவை கிராமத்தில்காஞ்சி மடத்தில் தங்கியுள்ளார்.
இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்த முதல் மனுவில், சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்யும் வரை ஜெயேந்திரர் தென்னிந்தியாவிலேயே இருக்கக்கூடாது.
தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களில் அவர் தங்கக் கூடாது என்று ஜாமீன் நிபந்தனையை மாற்ற வேண்டும் என்றுகோரப்பட்டுள்ளது.
இதில் பாண்டிச்சேரியை தவறுதலாக விட்டுவிட்டார்களா அல்லது தெரிந்தே விட்டார்களா என்று தெரியவில்லை.
2வது மனு:
முதல் மனு தாக்கல் செய்யப்பட்ட சில மணி நேரங்களில் இன்னொரு மனுவையும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது.
அதில், ஜெயேந்திரருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் அவருக்கு எதிரான ஆதாரங்கள் குறித்து சிலகருத்துக்களைத் தெரிவித்தது. போலீசாருக்கு எதிரான அந்தக் கருத்துக்கள் இந்த வழக்கின் விசாரணைக்கு இடைஞ்சலாக உள்ளன.
இதனால் அந்தக் கருத்துக்களை நீதிமன்றம் நீக்க வேண்டும் (திரும்பப் பெற வேண்டும்) என்று கோரப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியாருக்கு எதிராக போதிய நேரடி ஆதாரங்கள் இல்லை என உச்ச நீதிமன்றம் கருத்துத்தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications