சுனாமி: துக்கம் அனுசரித்த தமிழகம்
சென்னை:
சுனாமியால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழகத்தில் இன்று துக்க தினம் அனுசரிக்கப்பட்டது.உயிரிழந்தவர்களுக்கு தமிழகம் முழுவதும் இன்று காலை 10.30 மணிக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசுஅலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
சுனாமி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட வேண்டும் என்று அனைத்து கட்சிக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்ற முதல்வர் ஜெயலலிதா, 12ம் தேதியன்று (இன்று) ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும்அறிவித்தார்.
அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் இரண்டு நிமிட மெளனஅஞ்சலி செலுத்தப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில் சுனாமி பேரழிவுப் படங்கள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் அரைக் கம்பத்தில்தேசியக் கொடி பறக்க விடப்பட்டது.
ஆளுநர் மாளிகையில் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமையில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் இன்று காலை அமைச்சரவை கூடி மெளன அஞ்சலி செலுத்தியது. பின்னர் இரங்கல் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ராணுவத் திடலில் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் தலைமைச்செயலக ஊழியர்கள் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல தலைமைச் செயலக ஊழியர்கள், சென்னையில் உள்ள பிற அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், சென்னை,மதுரை, கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சி மேயர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல் தனியார் நிறுவனங்களிலும் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications