சுனாமி: மத்திய அரசிடம் அறிக்கை
டெல்லி:
![]() |
தமிழக கடற்கரையோர மாவட்டங்களில் சுனாமி அலைகள் தாக்கிய பகுதிகளைப் பார்வையிட மத்திய உள்துறை அமைச்சக இணைசெயலாளர் ஸ்ரீவத்சவா தலைமையில் 10 பேர் கொண்ட மத்திய குழு தமிழகத்திற்கு வந்தது.
தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பிரயாணம் செய்த அவர்கள், உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்து அறிக்கை தயார் செய்தனர்.அதனை உள்துறை அமைச்சகத்திடம் அளித்தனர்.
இது குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய குழு தாக்கல் செய்த அறிக்கையை உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்கள் குறிப்பிடும் நிவாரணஉதவிகளை நிவாரணம் மற்றும் மறுவாழ்வு கமிட்டி பரிசீலனை செய்யும்.
மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் தலைமையிலான இந்த கமிட்டியில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சிவராஜ் பாட்டீல்மற்றும் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் நிவாரணஉதவி குறித்து இந்த மாத இறுதியில் முடிடுெப்பார்கள்.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் 8.90 லட்சம் பேர் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,960 பேர் பலியானதாக மாநில அரசுதெரிவித்துள்ளது. 3 லட்சத்திற்கும் அதிகமானோர் 412 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு ரூ.4,800 கோடி நிதி மற்றும் 54,000 டன் உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கைவைத்துள்ளது. மத்திய அரசு ஏற்கனவே ரூ.250 கோடி வழங்கியுள்ளது. மேலும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களுக்கு தலா ரூ.1லட்சம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்













Click it and Unblock the Notifications