ஐஏஎஸ் தேர்வு வயது வரம்பை குறைக்க வைகோ எதிர்ப்பு
சென்னை:
ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். தேர்வுகளுக்கான வயது உச்ச வரம்பைக் குறைக்க வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் வைகோ கூறியிருப்பதாவது:
ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். தேர்வுகளில் மாற்றங்கள் செய்ய அமைக்கப்பட்ட கோத்தா தலைமையிலான குழு இந்தத் தேர்வுஎழுதுவதற்கான வயது உச்ச வரம்பை 4 ஆண்டுகள் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இத் தேர்வுகள் வங்கிப் பணி, மாநிலப் பணித் தேர்வுகளுக்கு முன் மாதிரியானது. அதனால் இதை மற்ற ஆணையங்களும் பின் பற்றி முடிவுஎடுக்கலாம். இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவர் பாதிக்கப்படுவர்.
இந்தத் தேர்வுகள் உடனடியாக நடைமுறைக்கு வந்தால் 29 வயது முதல் 35 வயது வரையுள்ள மாணவர்கள் அடுத்த ஆண்டு தேர்வு எழுதமுடியாது. ஆண்டுதோறும் 7 லட்சம் பேர் இத் தேர்வுகளை எழுதி வருகின்றனர்.
அவர்களில் 75 சதவீதம் பேர் கிராமப்புற மாணவர்கள். வயது வரம்பைக் குறைத்து, வேலை வாய்ப்பிற்கான வாசலின் கதவுகள்அனைத்தையும் மூடிவிட்டால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படைவார்கள். எனவே கோத்தா குழுவின் அறிக்கையை மத்திய அரசு ஏற்கவேண்டாம் என்று மதிமுக கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.
விஜயேந்திரர் கைது: வைகோ சந்தேகம்
விஜயேந்திரர் கைது தொடர்பாக வைகோ வெளியிட்ட இன்னொரு அறிக்கையில்,
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரை ஜாமீனில் விடுவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்திற்குள்ளாகவிஜயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நேரமும், சூழ்நிலையும் பல்வேறு விதமான யூகங்களுக்கு இடமளிக்கிறது என்றுகூறியுள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications