விஜயேந்திரரை போலீஸ் காவலில் எடுக்க முடிவு
காஞ்சிபுரம்:
விஜயேந்திரரை போலீஸ் காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார். தற்போது 15 நாட்கள் நீதிமன்றக் காவலில்சென்னை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இதே சிறையில்தான் காஞ்சி மடத்தின் முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர்உள்ளார்.
இது திடீர் கைது என்பதால் விஜயேந்திரர் மாற்று உடைகள் மற்றும் பூஜைப் பொருட்களை எடுத்து வரவில்லை. அவற்றை சங்கர மடஊழியர்கள் பின்னர் சிறைக்கு எடுத்து வந்தனர். அவர்கள் யாரும் விஜயேந்திரரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
அவர்கள் கொண்டு வந்த பொருட்களை சிறை அதிகாரிகள் வாங்கிக் கொண்டனர். அதேபோல் வழக்கறிஞர்கள் வைத்தியநாதன்,பாலசுப்பிரமணியம், ரவி அனந்தபத்மநாதன் ஆகியோருக்கும் விஜயேந்திரரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.
சமதா கட்சியின் முன்னாள் மாநலத் தலைவர் நந்தகுமார், சங்கர மட நர்வாகிகள், பக்தர்கள் என திரளான பேர்சிறை முன் திரண்டிருந்தனர். ஆனால் விசாரணைக் கைதிகளை திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டுமே சந்திக்கமுடியும் என்றும், மற்ற நாட்களில் நீதிமன்றத்திடம் இருந்து சிறப்பு அனுமதி பெற்ற பிறகே சந்திக்க முடியும் என்றும் சிறை அதிகாரிகள்கூறிவிட்டனர்.
இதனால் யாருக்கும் விஜயேந்திரரைப் பார்க்க அனுமதி கிடைக்கவில்லை.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications