விழி நீரை வழித்தெறிந்து..: கருணாநிதி
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள உணர்ச்சிப் பிரவாகமான பொங்கல் வாழ்த்துச் செய்தி:
வதந்திகளால் உயிர் துறந்து உன் போன்றோர் வாஞ்சைமிகு வாழ்த்துக்களால் பிழைத்தெழுந்துள்ள உன் அண்ணன், திராவிடர் தம் மரபுவழித் திருநாளாம் இப்பொங்கல் நாளில் பொங்கிடும் விழி நீரை விரல்களால் வழித்தெறிந்தவாறு இந்த மங்கல வாழ்த்து மடலைஎழுதுகின்றேன்.
கடந்த டிசம்பர் 26ம் தேதியின் அவலச் செய்தியாக வெடித்தபோது, அப்போலா மருத்துவமனைக்கு நானும் தூக்கிச் செல்லப்படுகிறேன்.
உடலில் தாக்கிய வலி, வேதனை, திடீர் நோயை விட என் உள்ளத்தில் தாக்கி உணர்விழக்கச் செய்த சுனாமி விளைவு படைத்திட்ட விபரீதம்,கடல் அலைகளின் மீதெல்லாம் உயிரற்ற உடல்களை- கட்டடங்களின் இடிபாடுகள்- கப்பல்கள் கவிழ்ந்ததென்ன, ஓடங்கள் மிதந்ததென்ன,தோணிகள் தொலைந்ததென்ன, தொகை தொகையாய் மனித உயிர்களை அலை அலையாய் வந்து இயற்கை விழுங்கிய கொடுமைதான்என்னே!
துயர் துடைக்க மத்திய-மாநில அரசுகளிடம் நிதி குவிந்தால் மட்டும் போதாது. அதனை ஆக்கபூர்வமானப் பணிகளுக்கு உரிய முறையில்ஈடுபடுத்த அரசுகள் முன் வர வேண்டும். குறிப்பிட்ட ஒரு காலத்தை வரையறை செய்து கொண்டு, அதற்குள் இந்தப் பூமியும் கடலும்இணைந்து நடத்திய இயற்கைச் சதியின் கொடுமைக்கு உள்ளானவர்களுக்குப் புதுவாழ்வு வழங்கி முடித்து விட்டோம் என்று அறிவிப்பதேஇந்தப் பொங்கல் நாளில் உமியளவு பூரிப்பை நாம் உதடுகளின் இடுக்கில் உதயமாகச் செய்திடும்.
ஏழையாகி விட்ட மீனவர்கள், உழவர்களின் கண்ணீர் துடைக்கும் கைகளுடன் இந்தக் கையும் என்றும் இணைந்திருக்குமெனஉழைப்போர்க்கு வணக்கம் சொல்லி, கவலைக் கருமேகத்துக்கிடையே களிப்பு மழைத் துளியாக இந்தப் பொங்கல் வாழ்த்தினைக் கருதிடுகஎன வேண்டுகிறேன்.
இவ்வாறு கருணாநிதி தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications