ஸ்தம்பித்து நிற்கும் சங்கர மடம்!
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 2,500 ஆண்டு கால வரலாற்றில் மடாதிபதிகள் இல்லாமல் மடம் இயங்கும் நிலை முதல் முறையாகஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் சங்கராச்சாரியார், விஜயேந்திரர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இல்லாத நிலையில் சங்கர மடத்தை சீல் வைக்க போலீசார் முடிவுசெய்துள்ளதாக காஞ்சிபுரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
மடத்தை விரைவில் அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைதானதில் இருந்து, பாரம்பரியம் மிக்க காஞ்சி மடம் பிரச்சனையில் சிக்கி 62நாட்களாகிறது.
தற்போது விஜயேந்திரரும் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம் சங்கர மடத்தின் பழம் பெருமை, பாரம்பரியம் ஒட்டுமொத்தமாககேள்விக்குரியாகிவிட்டது.
காஞ்சி சங்கர மட வரலாற்றில் இதுவரை மடாதிபதிகள் இல்லாத நிலை ஏற்பட்டதில்லை. மகாப் பெரியவர் காலத்தில் யாராவது ஒருமடாதிபதி மடத்தில் இருப்பார். மற்றவர்கள் தான் வெளியில் செல்வார்கள்.
மடத்தில் சந்திரமெளலீஸ்வரர் பூஜை தவறாமல் நடக்க வேண்டும் என்பது மகா பெரியவரின் உத்தரவு. அவர் இருந்தவரை இது சரியாகநடந்து வந்தது. ஆனால் ஜெயேந்திரர் மடாதிபதி ஆனவுடன் நிலைமை மாறியது.
ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் அடிக்கடி வெளியில் செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டனர். சந்திரமெளலீஸ்வரர் சிலை அவர்கள்செல்லும் இடங்களுக்கு எல்லாம் கொண்டு செல்லப்பட்டு அங்கு பூஜை நடந்தது.
இப்போது சங்கர மடத்தில் மடாதிபதிகள் இல்லை, மேலாளர் இல்லை, கணக்காளர் இல்லை. மொத்தத்தில் மடம் தனி மரமாய் நிற்கிறது.முக்கிய நிர்வாகிகள் யாரும் இல்லாததால் மடத்தின் நிர்வாகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது.
இந் நிலையில் மடத்தை சீல் வைத்துவிட்டு அதை அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும் பேச்சுஎழுந்துள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications