For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிவாரண பொருட்களை விற்கும் பொது மக்கள்!

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:

The scene in Cudalore
கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் வழங்கும் நிவாரணப் பொருட்களை அவர்கள்உள்ளூர் கடைகளில் விற்று வருவதாக கடலூர் மாவட்டத்தில் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து கடலூர் துணை மாஜிஸ்திரேட் பிரபாகரன் கூறியதாவது:

அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் வழங்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மதேவானம்பட்டினம் கிராமத்தில்உள்ள சிலர் தினமும் விற்றுவருவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக அயராது நிவாரணப் பணியில் ஈடுபட்டு வரும் தொண்டு நிறுவனங்களை இந்த செய்தி நிச்சயம்பாதிக்கும். மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் துறைக் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு இதை கொண்டு செல்வேன்.

மீனவர்கள் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருப்பதால், இந்த விஷயத்தை பக்குவமாக அணுக வேண்டியுள்ளது. அதே நேரத்தில்எல்லோருக்கும் நிவாரண உதவி தேவையான அளவு கிடைக்கிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டியிருக்கிறது என்றார்.

இதற்கிடையே கிராமத்தினர் சிலர் சண்டை போட்டு நிவாரணப் பொருட்களை அதிக அளவு பெறுவதாகவும், அவற்றைப் பின்னர்கடைகளில் விற்பதகாவும் உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

தேவானம்பட்டினத்தில் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வரும் பெண் தன்னார்வலர் ஒருவர் கூறுகையில்,

நாடு முழுவதும் இருந்து தொண்டு நிறுவனங்கள் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளன. இதனால் தேவைக்கு அதிகமாகவேநிவாரணப் பொருட்கள் இங்கு குவிந்துள்ளன.

கிராமத்தினரை பல்வேறு வகைகளாகப் பிரித்து அவரவர்க்குத் தேவையான அளவு நிவாரணப் பொருட்களை வழங்கும் வகையில் கூப்பன்கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிக அளவு பொருட்களைப் பெற அவர்கள் முயற்சிக்கின்றனர்.

தேவானம்பட்டினத்தில் சிலர் தொண்டு நிறுவனங்கள் அளித்த ரூ.200 பெறுமானமுள்ள படுக்கை விரிப்புகளை ரூ.50க்கு விற்றுள்ளனர். இதுநிவாரணப் பணியில் ஈடுபட்டவர்களை பெரிதும் பாதித்துள்ளது என்றார்.

மீனவர்களுக்கு இன்ஷ்யூரன்ஸ்:

இதற்கிடையே சுனாமி பேரழிவையடுத்து மீனவர்களுக்கு இன்ஷ்யூரன்ஸ் பாலிசி வழங்கும் பணிகளில் கடலூர் மாவட்ட நிர்வாகம் தீவிரம்காட்டி வருகிறது.

சுனாமி அலை தாக்குதலினால் கடலூர் மாவட்டத்தில் 6,000க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. இதில் பெரும்பான்மையானவர்கள்மீனவர்களே. இம் மாவட்டத்தில் மட்டும் 45,000 மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 30 முதல் 40 மீனவர்கள் மட்டுமே இன்ஷ்யூரன்ஸ்பாலிஸி எடுத்திருந்தனர். இதனால் மற்ற மீனவர்கள் இழப்பீட்டுத் தொகை எதுவும் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

இந் நிலையில் இப்போது மீனவர்கள் இன்ஷ்யூரன்ஸ் பாலிஸி வழங்க கடலூர் மீன்வளத் துறை அதிக அக்கறை செலுத்தி வருகிறது. இதுதொடர்பாக மீன்வளத் துறையின் உதவி இயக்குனர் ஸ்ரீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில்,

காப்பீட்டு நிறுவனங்களின் தவணைத் தொகை அதிகமாக உள்ளது. சொத்து மதிப்பில் 24 சதவீதம் தவணைத் தொகையாக இருப்பதால்,மீனவர்கள் வருடத்திற்கு ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை செலுத்த வேண்டியிருக்கிறது. இது ஒரு சாதாரண மீனவருக்கு மிக அதிகப்படியானதொகையாகும்.

கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் 8 மீனவர்களைக் குழு காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்து விட்டோம். அவர்களுக்கு டீசல் வரிச்சலுகையும் வழங்கப்பட்டது. ஆனால் மொத்த மீனவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டால் காப்பீடு எடுத்த மீனவர்களின்எண்ணிக்கை மிகக் குறைவாகும்.

எனவே தவணைத் தொகையை குறைக்க வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம். அப்போதுதான் சிறிய படகு வைத்திருப்பவர்களும்இன்ஷ்யூரன்ஸ் எடுப்பார்கள் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X