சங்கர மடத்தை நடத்தும் எண்ணமில்லை: அரசு
காஞ்சிபுரம்:
காஞ்சி சங்கர மடத்தை ஏற்று நடத்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்று உள்துறை செயலாளர் பவன் ரெய்னா கூறினார்.
காஞ்சி மடத்தை தமிழக அரசே ஏற்று நடத்தும் வகையில் அவசர சட்டம் இயற்றப்பட்டதாகவும், அது ஆளுநர் சுர்ஜித் சிங்பர்னாலாவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் வதந்தி பரவியது.
ஆனால் இதை தமிழக அரசு மறுத்துள்ளது. இது குறித்து உள்துறை செயலாளர் பவன் ரெய்னா கூறுகையில், காஞ்சி மடத்தை அரசுஏற்கும் எண்ணம் இல்லை என்றார்.
புதிய சங்கரமட மேலாளர் பொள்ளாச்சி மகாதேவ அய்யரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
தனிப்படை உத்தரவு:
இதற்கிடையே தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
மடத்தின் அன்றாட செலவுகளுக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொள்ள அனுமதித்துள்ளோம். அன்றாட செலவுவிவரங்களையும், வங்கிக் கணக்கு விபரங்களையும் தினமும் தனிப்படை போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுமகாதேவ அய்யரிடம் உத்தரவிட்டுள்ளோம்.
நாளை முதல் கணக்கு விவரங்களை ஒப்படைக்க வேண்டும். சங்கரமட கணக்குகளை தவறாக பயன்படுத்தக்கூடாதுஎன்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதேபோல, சங்கர மடத்தின் சார்பில் நடைபெறும் பணப் பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை தினசரி ஒப்படைக்கவேண்டும் என்று மடம் கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தனிப்படை அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications