கர்நாடகத்துக்கு 140 டிஎம்சி போதும்: தமிழகம் கருத்து
டெல்லி:
கர்நாடகத்திற்கு 140 டிஎம்சி தண்ணீர் போதும் என்றும், தனது பாசனப் பகுதியை 8.5 லட்சம் ஏக்கராக கர்நாடம் குறைக்க வேண்டும் என்றும்காவிரி நடுவர் மன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தில் தமிழக அரசின் வாதம் இந்த மாதத்திற்குள் நிறைவடைந்து விடும் என்று தெரிகிறது. அடுத்த மாதம் முதல்கர்நாடகத்தின் வாதம் தொடரும். நடுவர் மன்றத்தின் இறுதி அறிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகி விடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் நடுவர் மன்றத்தில் தமிழக அரசு அண்மையில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில்,
காவிரி டெல்டா பகுதிகளில் தனது பாசனப் பகுதியின் பரப்பை கர்நாடம் விரிவாக்கிக் கொண்டே போகிறது. இதை கர்நாடகம் நிறுத்தவேண்டும். அம் மாநிலத்துக்கு 140 டிஎம்சி போதும். தனது பாசனப் பரப்பை 8.5 லட்சம் ஏக்கராக குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் ஒரு பருவத்துக்கு கர்நாடகம் மொத்தமாக அணைக்கட்டுகளில் இருந்து 5-6 அடி நீரை பயன்படுத்துவதாகவும், அதை 3-4அடியாகக் குறைக்க வேண்டும் என்றும் தமிழகம் கோரியுள்ளது. கர்நாடகம் 48,000 ஏக்கருக்கு மேல் கரும்பு பயிரிட அனுமதிக்கக் கூடாதுஎன்றும், கோடை சாகுபடியை கைவிட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ஒரு ஆண்டில் காவிரியில் கிடைக்கும் 740-834 டிஎம்சி தண்ணீரில் 566 டிஎம்சி தேவை என்றும் தமிழக அரசு கோரியுள்ளது. ஆனால்தமிழகத்திற்கு 70 டிஎம்சி தண்ணீரே போதும் என்று கர்நாடகம் ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தனது பாசனப் பரப்பை தொடர்ந்து அதிகரித்து வரும் கர்நாடகம், அதற்கு காவிரி நீரைத் திருப்பிவிட்டுவிட்டு தமிழகத்துக்கு உரிய நீர் தரமறுத்து வருகிறது. இதனால் தான் பாசனப் பரப்பைக் குறைக்குமாறு தமிழகம் கோரியுள்ளது.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications