தொலைதொடர்பு தொழில்நுட்பம்: இந்தியா-ஜப்பான் ஒப்பந்தம்
சென்னை:
ஜப்பான், மலேசியா நாடுகளுக்கு ஆறு நாட்கள் அரசு முறைப் பயணமாக மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சர்தயாநிதி மாறன் நாளை செல்கிறார்.
தகவல் மற்றும் தொலைதொடர்புத் துறையில் இவ்விரு நாடுகளுடான ஒத்துழைப்பை அதிகப்படுத்தும் வகையில் அவரது இந்தப் பயணம்அமைகிறது.
இன்டர்நெட் அடிப்படையிலான தகவல் தொடர்பு, நெட்வொர்க் உருவாக்கம், அதி விரைவு மற்றும் அதிக அலைவரிசை கொண்டசெல்போன் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஜப்பானும் இந்தியாவும் இணைந்து செயல்படவுள்ளன.
ஜப்பானின் ஹார்ட்வேர் மற்றும் இந்திய சாப்ட்வேரை ஒருங்கிணைக்கும் வகையில் புதிய ஒப்பந்தங்கள் செய்யப்படவுள்ளன.
ஜப்பான் தொலை தொடர்புத் துறை அமைச்சர் அசோ தரோவுடன் இது குறித்து மாறன் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்திஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன.
தகவல் மற்றும் தொலை தொடர்புத் துறையின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அம்சங்கள் குறித்து இரு தரப்பும் விவாதிக்கின்றன. மேலும்தொலைதொடர்பு குறித்த கருத்தரங்கத்திலும் மாறன் உரையாற்றுகிறார்.
பின்னர் தொலைதொடர்பு சாதன உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் இந்தியாவில் முதலீடு செய்வதுதொடர்பாக விவாதிக்கிறார்.
இதனையடுத்து மலேசியா செல்லும் மாறன், அங்கு தொலைதொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ லிம் கெங் ஏய்க்கைச் சந்தித்துப்பேசுகிறார். அதேபோல் தொழிலதிபர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications