வீரப்பன் சமாதியில் திடீர் சிலை, பூஜை!
சேலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் சமாதியின் மீது புதிதாக 3 அடி சிலை வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ அரசுக்கும், காவல்துறைக்கும், வனத்துறைக்கும் பெரும் சவாலாக இருந்து வந்த வீரப்பன் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டான்.வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டாலும் கூட அவனது ஆதரவாளர்களும், ரசிகர்களும் இன்னும் குறையாமல் அப்படியே உள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மூலக்காடு கிராமத்தில்தான் வீரப்பன் புதைக்கப்பட்டான். வீரப்பன் புதைக்கப்பட்ட இடம் ஒருசுற்றுலா தலம் போல மாறிவிட்டது. ஏகப்பட்ட பேர் தினசரி அங்கு வந்து வீரப்பன் சமாதியைப் பார்த்துச் செல்வது வழக்கமாக உள்ளது.
இந் நிலையில், வீரப்பன் புதைக்கப்பட்ட இடத்தில் திடீரென இரவோடு இரவாக ஒரு சிலை முளைத்துள்ளது. வழக்கமான பச்சை நிற உடை,கடா மீசையுடன் அச்சு அசலாக வீரப்பனைப் போலவே இந்தச் சிலை உள்ளது.
துப்பாக்கியை தலைக்குப் பின்னால் இரு கைகளாலும் பிடித்தபடி வீரப்பன் நிற்பதாக சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியில்நன்மையே செய் என்று எழுதப்பட்டுள்ளது.
ஏராளமானோர் வீரப்பன் சிலைக்கு அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். சிலர் தேங்காய் உடைத்து பூ, பழம் வைத்து சாமிகும்பிட்டு விட்டும் செல்கின்றனர். சிலை எப்படி வந்தது, யார் வைத்தது என்று தெரியாமல் போலீசார் குழம்பிப் போயுள்ளனர்.
சிலையை தூக்குமாறு வீரப்பனின் உறவினர்களுக்கு மறைமுக எச்சரிக்கைகள் விடுத்து வருகிறது போலீஸ். தூக்காவிட்டால் இரவோடுஇரவாக வந்தது மாதிரியே இரவோடு இரவாக இதை போலீசாரே அப்புறப்படுத்துவர் என்று தெரிகிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications