ஜெ- உலக வங்கி குழு சந்திப்பு
சென்னை:
![]() |
உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிக் குழுவினர் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து சுனாமி நிவாரணநிதியுதவி குறித்து விவாதிக்கின்றனர்.
தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக உலக வங்கியின் இந்திய இயக்குனர்மைக்கேல் கார்ட்டர், ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய இயக்குனர் லூயிஸ் டி ஜோங்க் ஆகியோர் அடங்கிய குழுநாகை மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சுற்றிப் பார்த்தனர்.
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டனம், கீச்சாங்குப்பம், புதுப்பேட்டை, சிங்காரத்தோப்பு, நாகை மாவட்டம்அக்கரைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்ட இக் குழுவினர் இன்று சென்னையில் முதல்வர்ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
என்ன மாதிரியான உதவிகளை தமிழக அரசு எதிர்பார்க்கிறது, கடனுதவி எவ்வளவு தேவைப்படும் என்பதுஉள்ளிட்ட அம்சங்கள் குறித்து முதல்வருடன் இரு சர்வதேச வங்கிகளின் இயக்குனர்களும் விவாதிக்கவுள்ளனர்.
தமிழக கடலோரப் பகுதிகளில் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசுக்கு ஜெயலலிதாகோரிக்கை வைத்துள்ளார். இந்த திட்டத்துக்கு ரூ. 3,000 முதல் ரூ. 5,000 கோடி வரை செலவாகும் என்றும்கணக்கிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகளிடம் ஜெயலலிதா முக்கியமாகவிவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்













Click it and Unblock the Notifications