கோவை: தீவிரவாத கும்பல் ஊடுருவல்!

Subscribe to Oneindia Tamil

கோவை:

கேரளத்தில் குண்டு வெடிப்புகள் நடத்தும் திட்டத்தோடு கோவையில் ஒரு தீவிரவாதக் கும்பல் பதுங்கியிருப்பதாகத் தகவல்கிடைத்துள்ளதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய இடங்களில் 18 முதல் 20ம் தேதி வரை குண்டு வெடிப்புகள் நடத்த ஒரு கும்பல்திட்டமிட்டுள்ளதாக கேரள அரசுக்கு மத்திய உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து கேரள போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கும்பல் கோவையில் பதுங்கியிருப்பதாக கேரளபோலீசுக்குத் தகவல் வந்துள்ளது. இதையடுத்து தமிழக அரசை கேரளா எச்சரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து கோவை சரக டிஐஜி அசுதேஷ் சுக்லா தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இதையடுத்து நகர் முழுவதும் போலீஸ் கண்காணிப்பும், விடுதிச் சோதனைகள், வாகனச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கோவை தவிர திருப்பூர், ஈரோட்டிலும் சோதனைகள் நடக்கின்றன. ரயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

கொச்சியில் வெடிகுண்டு அபாயம்:

இதற்கிடையே கொச்சியில் கேரள உயர் நீதிமன்றத்தின் புதிய கட்டடத்திலும் தாஜ் ரெசிடென்சி ஹோட்டலிலும் தீவிரவாதிகள் வெடிகுண்டுவைக்கலாம் என்ற தகவல் வந்ததையடுத்து அந்தக் கட்டடங்களில் இன்று காலை தீவிர சோதனை நடத்தப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+