அன்னிய நாட்டு வங்கியில் ஜெ. பணம்: மிரட்டினார் சோனியா- விஎச்பி திடுக் புகார்
இந்தூர்:
அன்னிய நாட்டு வங்கிகளில் ஜெயலலிதா ஏராளமான பணத்தை முடக்கி வைத்துள்ளார். இதைச் சொல்லி, ஜெயலலிதாவை சோனியாகாந்தி மிரட்டித்தான் ஜெயேந்திரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைத்துள்ளார் என விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கல்கூறியுள்ளார்.
நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் சுரேஷ் பச்செளரி மூலமாக முதல்வர் ஜெயலலிதாவை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மிரட்டி, சங்கராச்சாரியாருக்கு எதிராக அவரை செயல்பட வைத்தார் என்றார் அவர்.
இந்தூரில் நிருபர்களிடம் பேசிய அவர்,
பிராமணர்கள் மட்டுமல்லாது பிராமணர்கள் அல்லாதோர் மத்தியிலும் ஜெயேந்திரருக்கு நல்ல பெயரும் புகழும் பரவ ஆரம்பித்தது.இதனால் பொறாமை கொண்ட சோனியா காந்தி தான், அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஜெயலலிதாவை வற்புறுத்தினார்.
காஞ்சி பகுதியில் இயங்கும் கிருஸ்துவ மிஷன்களுக்கு ஏகப்பட்ட அன்னியப் பணம் வருகிறது. இதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அன்னிய நாட்டு வங்கிகளில் ஜெயலலிதா ஏராளமான பணத்தை முடக்கி வைத்துள்ளார். இந் நிலையில் ஜெயலலிதாவை, சிபிஐயை தனதுவசம் வைத்திருக்கும் பர்சனல் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் சுரேஷ் பச்செளரி சந்தித்தார்.
அப்போது ஜெயலலிதாவின் வெளிநாட்டு வங்கிப் பணம் குறித்து பச்செளரி எடுத்துச் சொல்லி மிரட்டினார். ஜெயேந்திரர் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என நெருக்குதல் தந்தார்.
இதனால் தான் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். இந்த வழக்கை தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்.
நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து உங்கள் பெரும் பலத்தைக் காட்டுங்கள் என்று சங்கராச்சாரியாரிடம் சொல்லியிருக்கிறேன் என்றார்சிங்கல்.
ஜெயேந்திரர் மீது நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவை விட்டுவிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைத் தாக்குவதிலேயேசங் பரிவார் அமைப்புகளும் பா.ஜ.கவும் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications