லாரி கவிழ்ந்து 4 பெண்கள் சாவு

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்:

திருவள்ளூர் அருகே லாரி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 4 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் மற்றும் அதைச் சற்றியுள்ள 50 இளம் பெண்கள், காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் அடுத்தசெட்டிப்பேடு என்ற இடத்தில் பூங்கொத்து தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

இவர்கள் அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான மினி டெம்போ லாரியில் வேலைக்குச் சென்று வந்தனர். இந்த லாரியின் ஓட்டுநர் ராஜேஷ்(25) வண்டியை ஸ்டைலாக அங்கும் இங்கும் வளைத்து ஓட்டுவது வழக்கமாம். இது குறித்து அந்தப் பகுதி மக்கள் ராஜேஷை எச்சரித்தும்பலனில்லையாம்.

இந் நிலையில் இன்று காலை வழக்கம்போல் பெண்களை ஏற்றிக் கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. திருவள்ளூர் அருகே சென்றபோதுஒரு வளைவில் ராஜேஷ் வேகமாகத் திருப்ப முயற்சித்திருக்கிறார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்து லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இதில் பேரம்பாக்கத்தைச் சேர்ந்த கேசவன் என்பவரது மனைவிசாந்தி (30), ஜெயராமன் என்பவரது மகள் மகேஸ்வரி (20), செந்தாமரை என்பவரது மகள் நதியா (20), பொன்னஞ்சேரி ராஜி என்பவரதுமகள் லதா (18) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்தவர்களில் 32 பேர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் 12 பேர் சென்னை அரசு மருத்துவமனையிலும்சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 8 பேர் உயிருக்குப் போராடி வருகிறார்கள்.

விபத்துக்குக் காரணமான லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருவள்ளுவர்மாவட்ட எஸ்.பி. வரதராஜூ கூறுகையில், ஆடு மாடுகளைப் போல பெண்ளை லாரியில் ஏற்றிச்

சென்றுள்ளனர். இதனால் அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+