ஜெயேந்திரருடன் பங்காரு அடிகளார் மகன் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

கலவை:

Jayendrar கலவை சங்கர மடத்தில் தங்கியுள்ள ஜெயேந்திரரை மேல் மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மகன் அன்பழகன் சந்தித்தார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களின் செயலாளராக அன்பழகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, ஹரித்துவார் அகண்ட் போத்கங்கா மடத்தைச் சேர்ந்த பெண் சாமியார் மா பூர்ண பிரக்ஞான் என்பவரும்ஜெயேந்திரரை சந்தித்தார்.

ஜெயேந்திரர் தென் மாநிலங்களில் தங்கியிருக்க கூடாது என கேட்டு தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளநிலையில், அவர் வட மாநிலத்தில் தங்குவதாக இருந்தால் அகண்ட் போத்கங்கா மடத்தில் தங்க வேண்டும் என்று மாபூர்ணகேட்டுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மா பூரண பேசுகையில், கடவுள் இருக்கிறார். நல்லதே நடக்கும். தர்மத்திற்கு சோதனை ஏற்படுவதுவழக்கம். சீதைக்கு ஏற்பட்ட சோதனைபோல ஜெயேந்திரருக்கும் சோதனை ஏற்பட்டுள்ளது. இது பனி போல விலகிவிடும்.ஜெயேந்திரர் மீதுள்ள வழக்குகளிலிருந்து விரைவில் விடுதலை பெற மக்கள் தினமும் பிரார்த்திக்க வேண்டும் என்றார்.

இவரைப் போல மேலும் பலரும் ஜெயேந்திரரைத் சந்தித்தனர். மெளன விரத்தத்தில் இருக்கும் ஜெயேந்திரர் அவர்களுக்கு ஆசிவழங்கினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+