இந்தி எதிர்ப்பு தியாகிகளுக்கு ஜெ. வீர வணக்கம்!!
சென்னை:
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி தங்களது இன்னுயிரை ஈந்த மொழிப் போர் தியாகிகளுக்கு வருகிற 25ம் தேதி அதிமுகசார்பில் தமிழகம் முழுவதும் வீர வணக்கம் செலுத்தப்படும் என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
வழக்கமாக இந்தி எதிர்ப்புப் போராளிகளை திமுக, திக ஆகியவை தான் நினைவுகூறும், நிகழ்ச்சிகளை நடத்தும்.
ஆனால், இம்முறை இந்த தியாகிகள் நினைவாக அதிமுகவும் வீர வணக்கம் செலுத்தப் போவதாக முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி தமிழகத்தில் மாபெரும்போராட்டம் தொடங்கியது. அந்த போராட்டம் உலகம் அதுவரை காணாத புரட்சியாக மாறியது.
இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து போராடி தங்களது இன்னுயிரை ஈந்த வீர மறவர்களுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டியதுநமது கடமை.
ஜனவரி 25ம் தேதியன்று அதிமுக மாணவர் அணி சார்பில் அமைப்பு ரீதியாக மாவட்ட தலைநகரங்களில் வீர வணக்க நாள்பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
நாமக்கல்லில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்னையனும், தென் சென்னையில் ஓ.பன்னீர் செல்வமும், மத்தியசென்னையில் திண்டுக்கல் சீனிவாசனும் கலந்து கொண்டு பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications