ரூ.700 கோடி திட்டங்கள்: கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்
சென்னை:
சென்னையில் ரூ. 700 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை திமுக தலைவர் கருணாநிதி அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார்.
மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறையின் கீழ் வரும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் சென்னையில் ரூ. 700கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்படவுள்ளன. ஜனவரி 30ம் தேதி மதுரவாயல் சந்திப்பு அருகேமதுரவாயல்-தாம்பரம் நான்கு வழிப் பாதை அமைக்கும் பணியை கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
மதுரவாயல்-மாதவரம் இடையிலான புதிய நான்குவழிப் பாதைக்கு அடிக்கல் நாட்டுகிறார். மதுரவாயலில் 3 அடுக்குமேம்பாலத்திற்கான அடிக்கல்லையும் கருணாநதி நாட்டுகிறார். இதேபோல, சென்னை பைபாஸ் சாலைக்கும், இரும்புலியூருக்கும்இடையிலான சுரங்கப் பாதை அமைக்கும் பணியையும் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
இதேபோல அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே புதிய மேம்பாலம் அமைக்கும் பணியையும் கருணாநிதி தொடங்கி வைத்துஅடிக்கல் நாட்டுகிறார். பட்டரவாக்கம் பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியையும், மாதவரத்தில் 3 வழிச்சாலை அமைக்கும் பணிக்கும் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்.
பிப்ரவரி 1ம் தேதி வேறு சில திட்டங்களுக்கு கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார். கிண்டி கத்திப்பாரா சந்திப்பு, பாடி, கோயம்பேடுஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள புதிய மேம்பாலங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கருணாநதி கலந்து கொண்டுஅடிக்கல் நாட்டுகிறார்.
இதேபோல, விமான நிலையம் முன்பு அமைக்கப்படவுள்ள மேம்பாலம், விமான நிலையத்தையும், திரிசூலம் ரயில்நிலையத்தையும் இணைக்கும் சுரங்க நடைபாதைப் பணிக்கும் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்.
இந் நிகழ்ச்சிகளில் மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, மத்திய தகவல் தொடர்புஅமைச்சர் தயாநிதி மாறன், திமுக எம்.பிக்கள் செ.குப்புசாமி, சண்முகசுந்தரம், சரத்குமார், திமுக துணைப் பொதுச் செயலாளர்ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை குரோம்பேட்டை பகுதியில் மத்திய தரை வழிப் போக்குவரத்துத் துறையின் நெடுஞ்சாலை ஆணையத்தின்சார்பில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை கருணாநிதி திறந்து வைத்தார். தற்போது மிகப் பெரிய அளவிலான திட்டப்பணிகளுக்கு கருணாநிதி அடிக்கல் நாட்டவிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications