ஒரே சிறையில் புலிகள், ஈ.என்.டி.எல்.எப் போராளிகள்!!

Subscribe to Oneindia Tamil

செய்யாறு:

செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஈ.என்.டி.எல்.எப் போரளிகள் 11 பேர் செய்யாறு கிளைச் சிறைக்குமாற்றப்பட்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து பூந்தமல்லி சிறையில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளும் செய்யாறு கிளைச்சிறைக்கு மாற்றப்படவுள்ளனர்.

க்யூ பிராஞ் பிரிவின் ஏடிஎஸ்பி புருஷோத்தமன், டிஎஸ்பி அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் ஈ.என்.டி.எல்.எப்போராளிகள் இங்கு கொண்டு வரப்பட்டனர்.

இதே போல பூந்தமல்லியில் இருந்து விடுதலைப் புலிகளும் இங்கு கொண்டு வரப்பட்டு தனி செல்லில் அடைக்கப்படவுள்ளனர்.இதற்காக அமைக்கப்பட்டு வரும் தனி செல் பகுதியை திருவண்ணாமலை கலெக்டர் சத்யபிரதா சாஹூ மற்றும் மாவட்ட எஸ்பிபாரி ஆகியோர் பார்வையிட்டனர்.

சிறையின் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்தும் அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

எதற்காக புலிகளும் மற்ற போராளி இயக்கத்தினரும் இந்தக் கிளைச் சிறைக்கு மாற்றப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+