பக்ரீத்: கோவையில் முஸ்லீம்கள் தொழுகை
Subscribe to Oneindia Tamil
கோவை:
பக்ரீத் பண்டிகையையொட்டி கோவையில் முஸ்லீம்கள் இன்று சிறப்பு தொழுகை நடத்தினர்.
நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி கோவையில் உள்ள முஸ்லீம்கள் இன்று சிறப்புத்தொழுகை நடத்தினர். ஜமாத் அக்லில் குர்ஆன் ஜமாத் சார்பில் நடந்த கோவை நல்லாயன் உயர் நிலைப்பள்ளிமைதானத்தில் நடந்த தொழுகையில் 1000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கலந்து காண்டனர்.
இதேபோல கோரிமேடு பகுதியிலும் முஸ்லீம்கள் தொழுகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கேரளாவில்தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாக வந்த தகவல் மற்றும் சிறப்புத் தொழுகையையொட்டி கோவையில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications