1,640 பக்க குற்றப் பத்திரிக்கை நாளை தாக்கல்!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

Shankarramanசங்கரராமன் கொலை வழக்கில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்என்று காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் கூறியுள்ளார்.

வழக்கில் அப்ரூவராக மாறிவிட்ட ரவி சுப்ரமணியம் நாளை இந்த வழக்கில் முதல் ஆளாக சாட்சியம் அளிக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் தனிப் போலீஸ் படைக்கும், அரசு வழக்கறிஞர்களுக்கும் இடையே குற்றப்பத்திரிக்கை தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகக் செய்திகள் வந்த நிலையில், நாளையே அதுதாக்கல் செய்யப்படும் என பிரேம்குமார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி இந்தக் கொலை நடந்தது. இந்த வழக்கில் சங்கராச்சாரியார்கள், ரெளடி அப்பு, காண்ட்ராக்டர் ரவிசுப்பிரமணியம், ரகு, கூலிப் படையினர், சங்கர மடத்தின் நிர்வாகிகள் என 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெயேந்திரர் கைதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை படு வேகத்தில் நடந்தது. இந்தக் கொலை வழக்கில் சுமார் 1,640 பக்கங்கள்கொண்ட குற்றப் பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

அசுர வேகத்தில் இரவு பகலாக டைப் செய்யப்பட்ட இந்த குற்றப் பத்திரிக்கையில் சங்கரராமன் எழுதிய 30க்கும் மேற்பட்ட கடிதங்களின்சாரமும், கொலைச் சதித் திட்டம் தீட்டப்பட்ட விதம் குறித்தும், காஞ்சிபுரம் லாட்ஜில் கொலையாளிகள் தங்கிய விவரம், அவர்களிடம்கைப்பற்றப்பட்ட லாட்ஜ் ரசீது,

மடத்தில் இருந்து பணம் தரப்பட்டது, கொயைை நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலம், கொலையாளிகளின் வாக்குமூலம்,ஜெயேந்திரர் தந்த வாக்குமூலம், இதன் வீடியோ ஆதரங்கள்,

அப்ரூவராக மாறிவிட்ட ரவி சுப்பிரமணியம் தந்துள்ள சாட்சியம், அப்பு தந்த வாக்குமூலம்,

கொலையாளிகள்-சங்கர மட போன் தொடர்புகள், கொலையாளிகள் வந்த டயோடா குவாலிஸை ஓட்டிய டிரைவர் தந்த வாக்குமூலம்ஆகியவை குறித்து முழுமையான விவரங்கள் இதில் இடம் பெற்றுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரேம்குமார் பேட்டி:

இது குறித்து காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், சங்கரராமன் கொலை வழக்கில் ரவிசுப்ரமணியம் அப்ரூவர்ஆகியுள்ளார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாளை காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. முதல் ஆளாக ரவி சுப்ரமணியம் சாட்சியம்அளிக்கிறார்.

குற்றப் பத்திரிக்கை மொத்தம் 1,640 பக்கங்கள் கொண்டதாக உள்ளது 476 சாட்சிகள், 714 ஆவணங்களுடன் குற்றப் பத்திரிக்கை தயார்செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்தக் குற்றப் பத்திரிக்கையை நகல் எடுப்பதற்காக (வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 25 பேருக்கும் தருவதற்காக) ரூ. 20 லட்சம் செலவில் புதியஜெராக்ஸ் இயந்திரம் காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது, எங்களது ஒப்புதல்இல்லாமல் அதை தாக்கல் செய்ய முடியாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் போலீஸ்- அரசு வழக்கறிஞர்களுக்கு இடையே இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பதுவெட்டவெளிச்சமாகியுள்ளது.

ஏற்கனவே கொலை வழக்கை விசாரித்து வரும் கூடுதல் எஸ்.பி. சக்திவேலுக்கும், எஸ்.பி. பிரேம்குமாருக்கும்இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள முன்பு தகவல்கள் வெளியாகின.

சக்திவேல்தான் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தும் கூட பிரேம்குமாரே அனைத்தையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்வதால் சக்திவேல் அப்செட் ஆகியிருந்ததாகவும் கூறப்பட்டது நினைவுகூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+