உண்மை அறியும் குழுவின் புகாரில் உண்மையில்லை: எஸ்.பி.
ஈரோடு:
வீரப்பன் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, சித்திரவதைப்படுத்தி கொல்லப்பட்டதாக கூறப்படுவதில் சற்றும் உண்மையில்லைஎன்று சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன் கூறியுள்ளார்.
வீரப்பன் கொல்லப்பட்டது குறித்து விசாரித்து ஆய்வு செய்த உண்மை அறியும் குழுவினர், வீரப்பனை மயக்க மருந்து வைத்துபிடித்து, 2 நாட்கள் சித்திரவதை செய்து பின்னர்தான் அதிரடிப்படையினர் அவனை சுட்டுக் கொன்றார்கள் எனத்தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக செந்தாமரைக்கண்ணன் கருத்து தெரிவிக்கையில், இதில் சற்றும் உண்மையில்லை. வீரப்பனைப் பிடிப்பதுதான்எங்களது முக்கிய இலக்கு. அதை நாங்கள் நிறைவேற்றி விட்டோம். வீரப்பனை சுட்டுக் கொன்ற சம்பவத்தை நாங்கள் மறைக்கவேண்டிய அவசியம் இல்லை.
வீரப்பன் கொல்லப்பட்டது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது. எனவே சிலர் எழுப்பும் கேள்விகள்,குற்றச்சாட்டுக்கள், சந்தேகங்களுக்கு நாங்கள் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்றம் உள்ளது,அதுவிசாரிக்கட்டும். அங்கே அவர்களும் வரட்டும், நாங்கள் பதில் சொல்கிறோம்.
வீரப்பன் மனைவி சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் பெயரை அவர்பயன்படுத்தியுள்ளார். அவர் அதிரடிப்படையில் வேலை பார்த்தது உண்மைதான் ஆனால் பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார். தற்போத டெல்லியில் பணியாற்றி வருகிறார்.
எங்களால் தனது குடும்பத்துக்கு ஆபத்து என்று முத்துலட்சுமி கூறுவதை ஏற்க முடியாது. எங்களது இலக்கு வீரப்பன்தான் தவிர,முத்துலட்சுமியோ அவரது குழந்தைகளோ அல்ல.
வீரப்பனின் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவும் வகையில், அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் அதை நாங்கள்வரவேற்போம், அவ்வாறு செய்ய பரிந்துரைக்கவும் தயாராக உள்ளோம் என்றார் செந்தாமைரக்கண்ணன்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications