சுனாமி: தெற்காசிய பலி 2,20,000 ஆக உயர்வு
ஜகார்த்தா:
![]() |
இந்தோனேஷியாவில் மேலும் 50,000 பேர் இறந்ததாக வந்த தகவலையடுத்து, தெற்காசியாவில் சுனாமியால் பலியானவர்களின்எண்ணிக்கை 2,20,000 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேஷியாவில் மேலும் 50,000 பேர் சுனாமி தாக்குதலுக்கு பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.இதனையடுத்து இந்தோனேஷியாவில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,66,320 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் 30,920 பேர் இறந்ததாகவும், மேலும் 5,565 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 10,744 பேர் உயிரிழந்ததாகவும், 5,669 பேரைக் காணவில்லை என்றும் அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.காணாமல் போனவர்கள் இறந்திருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
தாய்லாந்தில் காணாமல் போனவர்களில் 9 பேர் இறந்ததாக அந் நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்த தகவலையடுத்து பலிஎண்ணிக்கை 5,423 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போனவர்களின் தற்போதைய எண்ணிக்கை 3,115 ஆகும்.
இவர்களில் 2,101 பேர் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 1,014 பேர் வெளிநாட்டவர் என்றும் கூறப்படுகிறது.
மியான்மரில் 59 பேர் பலியானதாக அந்நாட்டு பிரதமர் சூ வின் தெரிவித்துள்ளார். ஆனால் 90க்கும் மேற்பட்டோர்இறந்திருக்கலாம் என்று ஐ.நா. சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாலத்தீவில 82 பேர் இறந்துள்ளனர். மேலும் 26 பேரைக் காணவில்லை. மலேசியாவில் 68 பேர் பலியாகிவிட்டனர். இவர்களில்பெரும்பான்மையோர் பினாங் தீவைச் சேர்ந்தவர்கள்.
ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள சோமாலியாவில் 298 பேரும், தான்சானியாவில் 10 பேரும், கென்யாவில்ஒருவரும் பலியாகியுள்ளனர்.
இந்திய பெருங்கடலில் மீண்டும் நிலநடுக்கம்:
இதற்கிடையே இந்திய பெருங்கடலில் நேற்றிரவு 9.30 மணிக்கு நிலநடுக்கம் (5.2 ரிக்டர்) ஏற்பட்டது. இதனால் பாதிப்பு ஏதேனும்ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.













Click it and Unblock the Notifications