வரதட்சணை கேட்ட மனைவி, மாமியார் கைது

Subscribe to Oneindia Tamil

ஊட்டி:

வரதட்சணை கேட்டு மனைவியும், மாமியாரும் கொடுமைப்படுத்தியதாக கணவர் புகார் அளித்தார். அதன் பேரில் இருவரையும்போலீஸார் கைது செய்தனர்.

வழக்கமாக வரதட்சணை கேட்டு மனைவியை அடிக்கும் கணவரைத்தான் பார்த்திருப்போம். ஆனால் ஊட்டியில் இது தலைகீழாகநடந்துள்ளது. ஊட்டி குளிச்சோலை பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் கவிதா என்பவருக்கும்5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கீர்த்தனா என்ற 4 வயது மகளும் இருக்கிறார்.

கவிதாவுடன் ஒப்பிடுகையில், மூர்த்தி அதிகம் படிக்காதவர், அழகு குறைந்தவர். இதனால் கல்யாணமானதிலிருந்தே மூர்த்தியை மட்டம்தட்டியேப் பேசுவது கவிதாவின் வழக்கம் என்று தெரிகிறது. அடிக்கடி கணவருடன் சண்டை பிடிப்பார் கவிதா.

மகளுக்கு ஆதரவாக அவரது தந்தை ஜெயராமனும் அடிக்கடி மருமகனை திட்டுவது வழக்கம் என்று தெரிகிறது. மேலும் தனது வீட்டுக்குஅருகிலேயே ஒரு வீட்டைப் பிடித்து அங்கு மகளையும், குடும்பத்தையும் குடி வைத்துள்ளார் ஜெயராமன்.

இந் நிலையில் கோயிலுக்கு போகலாம் என்று கவிதாவிடம் மூர்த்தி சொல்லியுள்ளார். ஆனால் அதை கவிதா ஏற்கவில்லை. அப்போதுஅங்கு ஜெயராமன் வந்துள்ளார். நீ பால் வியாபாரம் பார்த்தும், தோட்ட வேலை பார்த்தும் எனது மகளைக் காப்பாற்ற முடியாது. எனவேஉனது வீட்டில் சொல்லி ரூ. 1 லட்சம் வாங்கி வா, வேறு தொழில் வைத்துத் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதையே கவிதாவும் சொல்லி பணம் வாங்கி வராமல் வீட்டுக்கு வராதே என்று கூறி கணவரை வெளியே அனுப்பி விட்டார். இதனால்சோகமடைந்த மூர்த்தி வீட்டுக்கு வெளியே வந்து தன்னை ஜெயராமன் குடும்பத்தினர் ஏமாற்றி விட்டார்கள், கொடுமைப்படுத்துகிறார்கள்என்று கூறி சப்தமிட்டுள்ளார்.

இதையடுத்த ஜெயராமன், அவரது மனைவி பிரேமா, மகன் மூர்த்தி, கவிதா ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்து மூர்த்தியை அங்கிருந்து விரட்டிஅடித்துள்ளனர். தாக்கவும் செய்துள்ளனர். இதில் மூர்த்தி காயமடைந்துள்ளார்.

உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் மூர்த்தியை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர். இதுதொடர்பாக போலீஸில்மூர்த்தி சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

புகாரின் பேரில் விரைந்து வந்த போலீஸார் கவிதா, பிரேமாவைக் கைது செய்தனர். ஜெயராமனும், அவரது மகன் மூர்த்தியும்தலைமறைவாகி விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+