ஜெயேந்திரர் காஞ்சிக்கு திரும்புவது எப்போது?
கலவை:
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு ஜெயேந்திரர்செல்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் வரை காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு வர மாட்டேன் என்று உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதானவிசாரணையின்போது ஜெயேந்திரர் தெரிவித்திருந்தார். இதையடுத்து அதையே நிபந்தனையாக விதித்து உச்ச நீதிமன்றம் ஜாமீன்அளித்தது.
தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில், இந்த நிபந்தனை முடிவுக்கு வந்துள்ளது. குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டுள்ள விவரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் ஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் தெரிவிக்கவுள்ளனர்.
இது தொடர்பாக ஜெயேந்திரரின் வழக்கறிஞர் தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
போலீஸாரின் குற்றப்பத்திரிக்கை ஜோடிக்கப்பட்ட ஒன்றாகும். குற்றம் சாட்டப்பட்டவர்களின் ரகசிய வாக்குமூலம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. வழக்கு சிபிஐ விசாரணைக்கு சென்று விடுமோ என்ற அச்சத்தில் போலீஸார் அவசரம் அவசரமாககுற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.
ஒரு சதி திட்டத்திற்கு 370 சாட்சிகள் இருந்தார்கள் என்பதையும், 370 பேர் சேர்ந்து சதிதிட்டம் தீட்டினார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ளமுடியாது.
ஜெயேந்திரர் காஞ்சி சங்கர மடத்திற்கு எப்போது திரும்புவார் என்பது குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களில் சில தொடர்பாகவிளக்கம் பெற முடிவு செய்துள்ளோம். வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் நாளை மறுநாள் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கோருவார்.அதனையடுத்து சங்கர மடத்திற்கு எப்போது செல்வது என்று ஜெயேந்திரர் முடிவு செய்வார் என்று கூறினார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications