ஸ்ரீநிவாச்சார் கொலை: நிதி நிறுவன அதிபரிடம் விசாரணை
காஞ்சிபுரம்:
காஞ்சி உத்தராதி மட நிர்வாகி ஸ்ரீநிவாச்சார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஸ்ரீ பெரும்புதூர் ரியல் எஸ்டேட் அதிபர் கார்த்திக்என்பவரிடம் காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஸ்ரீநிவாச்சார் கடந்த 19ம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைக் கண்டுபிடிக்க 3 தனிப்படைகள்அமைக்கப்பட்டன.
நில விவகாரம், கந்து வட்டி தொழில் என பல கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந் நிலையில் இன்று ஸ்ரீபெரும்புதூரைச்சேர்ந்த நிதி நிறுவன அதிபரும், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவருமான கார்த்திக் என்பவரை விஷ்ணுகாஞ்சி போலீஸார்காஞ்சிபுரத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
கொல்லப்பட்ட மேலாளருக்கும், கார்த்திக்குக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், மடத்திற்குச் சொந்தமான சில நிலங்களை விற்பனைசெய்வது தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் கார்த்திக்கிடம் இன்றுபோலீஸார் விசாரணை நிடத்தி வருகின்றனர்.
பாட்னாவுக்கு தனிப்படை விரைவு:
இந் நிலையில் பாட்னாவில் உள்ள உத்திராதி தலைமை மடத்தில் உள்ளவர்களுக்கும் ஸ்ரீநிவாச்சாருக்கும் இடையே மோதல் ஏதும் இருந்ததாஎன்பது குறித்தும் போலீஸார் விசாரிக்கவுள்ளனர்.
இது தொடர்பாக பாட்னா மடத்தின் நிர்வாகி உள்பட 3 பேருக்கு விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையேபாட்னாவுக்கும் ஒரு தனிப்படை விரைந்துள்ளது.
மேலும் கொலை நடந்த தினத்தில் மடத்தில் இருந்த ஸ்ரீபெரும்புதூர் மடத்துக் கிளை மேலாளர் ராமன்ஜியிடமும் தீவிர விசாரணை நடந்துவருகிறது. இவருக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது என்பதால் இந்தி தெரிந்த போலீஸாரை வைத்து விசாரிக்கின்றனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications