சங்கரராமன்: அப்புவையும் அப்ரூவராக்க முயற்சி?
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் ரவி சுப்பிரமணியத்தைத் தொடர்ந்து கூலிப் படைத் தலைவன் அப்புவையும் அப்ரூவர் ஆக்க காஞ்சிபுரம்போலீஸார் முயன்று வருவதாகத் தெரிகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியம் அப்ரூவர் ஆகியுள்ளார். ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கிலும் அவர்அப்ரூவர் ஆகவுள்ளார். இதன் மூலம் வழக்குகளிலிருந்து அவர் விடுபட்டு, போலீஸ் தரப்பு சாட்சியாக மாறியுள்ளார். அவருக்கு மிக மிககுறைந்தபட்ச தண்டனையே கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந் நிலையில் மற்றொரு முக்கியக் குற்றவாளியான அப்புவையும் அப்ரூவர் ஆக்க போலீஸ் தரப்பு முயலுகிறது. அப்புவுடன் சேர்த்துக்கைது செய்யப்பட்ட கூலிப் படையைச் சேர்ந்த 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அத்தோடு சுந்தரேச அய்யர், ரகு ஆகியோர்மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
ஆனால் அப்பு மீது மட்டும் இன்னும் குண்டர் சட்டத்தைப் பிரயோகிக்கவில்லை. அவரை அப்ரூவராகுமாறு போலீஸ் தரப்பு கேட்டுவருவதாகவும், ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் குண்டர் சட்டத்தைப் பிரயோகிக்க மாட்டார்கள் என்றும், ஆனால் அப்ரூவர் ஆக மறுத்தால்குண்டர் சட்டத்தின் கீழ் அவரையும் கைது செய்ய போலீஸ் தரப்பு ரெடியாக உள்ளதாகவும் தெரிகிறது.
அப்புவும் அப்ரூவரானால் சங்கராச்சாரியார்கள் மீதான போலீஸ் பிடி இறுகும் என்று தெரிகிறது. மேலும் அவர்கள் தண்டனையிலிருந்துதப்புவது அவ்வளவு எளிதாக இருக்காது என்றும் போலீஸ் தரப்பு கூறுகிறது. எனவே இன்னும் ஓரிரு நாட்களில் அப்பு அப்ரூவர் ஆனார்அல்லது குண்டர் சட்டத்தில் கைது என்ற செய்தி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications