தமிழகத்தில் இந்து மதத்திற்கு ஆபத்து
கலவை:
தமிழகத்தில் இந்து மதம் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், ஜெயேந்திரர் கைது இந்து மதத்திற்கு எதிரான தாக்குதல் என்றும் முன்னாள்காங்கிரஸ் இளைஞர்கள் தலைவரும், தீவிரவாதத்திற்கு எதிரான முன்னணியின் தலைவருமான எம்.எஸ்.பிட்டா தெரிவித்தார்.
பிட்டா ஜெயேந்திரைச் சந்திப்பதற்காக இன்று கலவை வந்தார். கலவை மடத்தில் அரை மணி இருந்தவர் பின்னர் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
ஜெயேந்திரர் பூஜையில் இருப்பதால் நான் இன்னும் அவரை சந்திக்கவில்லை. காத்திருந்து அவருடன் பேசுவேன்.
நான் காங்கிரஸ் தலைவராகவோ, தீவிரவாதத்திற்கு எதிரான முன்னணியின் தலைவராகவோ இங்கு வரவில்லை. நான் ஒரு பக்தனாகவேஜெயேந்திரரைப் பார்க்க வந்துள்ளேன்.
தற்போது அரசியல் தீவிரவாதம் மதத் தலைவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஆரோக்கியமான போக்கு அல்ல. இதுதொடர்பாக தீவிரவாதத்திற்கு எதிரான முன்னணியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஜெயேந்திரருடன் பேசிய பின்பு முடிவு செய்வேன்.
ஜெயேந்திரர் கைதைக் கண்டித்த முதல் நபர் நான்தான். நான் ஜெயேந்திரரை முன்பே சந்திக்கத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் முன்னாள்பிரதமர் நரசிம்ம ராவின் மரணமடைந்துவிட்டால், சந்திக்க முடியவில்லை.
ஜெயேந்திரர் கைது இந்து மதத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். தமிழகத்தில் இந்து மதம் ஆபத்தான நிலையில் உள்ளது என்றார்.
பிட்டா இஸட் பிளஸ் பாதுகாப்பில் இருப்பதால் கலவை மடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தது. பக்தர்கள் தீவிர சோதனைக்குப்பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக காஞ்சி மடத்திற்கு பிட்டா சென்றார். அவரை மடத்தின் மேலாளர் பொள்ளாச்சி மகாதேவ அய்யர் வரவேற்றார். அங்குநிருபர்களிடம் பேட்டியளித்த பிட்டா,
ஜெயேந்திரர் கைதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குத் தொடர்பிருப்பதாகக் கூறுவது தவறு. இந்த விவகாரத்தில் மத்திய அரசுதலையிடாது. அவ்வாறு தலையிட்டால் மாநிலத்தின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக அமையும்.
மடத்தின் வங்கிக் கணக்குகளை முடக்குவதன் மூலம் மடத்தை ஒழித்து விட முடியாது. எத்தகைய எதிர்ப்பையும் ஜெயேந்திரர் தைரியமாகசந்திப்பார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications