குற்றப்பத்திரிக்கை நகல் எடுக்கும் பணி தீவிரம்
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல்களை வழங்குவதற்காக,குற்றப்பத்திரிக்கையை பிரதி எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் 1,873 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் 21ம் தேதிதாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிக்கையை நீதிபதி உத்தமராஜ் ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து குற்றப்பத்திரிக்கை நகலை குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கொடுப்பதற்காக நகல் எடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) குற்றப்பத்திரிக்கை நகல் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக இரவு, பகலாக காஞ்சிபுரம் காட்டுப்பங்களாவில் அதி நவீன ஜெராக்ஸ் இயந்திரத்தில் குற்றப்பத்திரிக்கையை நகல் எடுக்கும் பணிதீவிரமாக நடந்து வருகிறது.
ரூ. 20 லட்சம் செலவில் இந்த ஜெராக்ஸ் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு தரப்படும் நகல்கள் தவிர,சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பான மனுக்கள் விசாரணையில் உள்ள சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கும்குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்படும்.
குற்றப்பத்திரிக்கையை நகல் எடுக்கும் பணியில் கூடுதல் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று காவல்துறை வட்டாரத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications