நானும், திருமாவும் இனி பிரிய மாட்டோம்: ராமதாஸ்
மதுரை:
என்னையும், திருமாவளவனையும் இனி யாராலும் பிரிக்க முடியாது, நாங்கள் இனி பிரிய மாட்டோம் என்று பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறினார்.
மதுரையில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் தலித் மக்களுக்கு தனி வாக்காளர் தொகுதி, இரட்டை வாக்குரிமை தொடர்பானமாநாடு நடந்தது.
இதில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர்டாக்டர் ராமதாஸ், மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர்சேதுராமன், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன், இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் ராமதாஸ் அத்வாலே உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
மாநாட்டில் ராமதாஸ் பேசுகையில், திருமாவளவனும், நானும் 4 ஆண்டுகளாக பிரிந்திருந்தோம். இனி மேல் பிரிய மாட்டோம்,இணைந்தே இருப்போம். இணைய மாட்டோம் என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் எதிர்பாராமல் நாங்கள் இணைந்ததும் இப்போதுவயிறு எரிகிறார்கள்.
இனி எந்த சக்தியும் எங்களைப் பிரிக்க முடியாது. இணைந்தே செயல்படுவோம். இரட்டை வாக்குரிமை தொடர்பாக மத்திய அரசின்கவனத்துக்குக் கொண்டு செல்வேன் என்றார்.
திருமாவளவன் பேசுகையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய தலித் ஊராட்சிகளில்கடந்த 8 ஆண்டுகளாக தேர்தலை நடத்த முடியவில்லை. அப்படியே தேர்ந்தெடுக்கப்பட்டாலும் உடனடியாக ராஜினாமா செய்யும் நிலைஉள்ளது.
இந் நிலையைத் தவிர்க்கத்தான் இரட்டை வாக்குரிமை கேட்கிறோம். அது இருந்தால் இந்த நிலை இருக்காது. தலித் மக்களுக்கு அரசியல்அதிகாரம் பெற இரட்டை வாக்குரிமை தேவை என்றார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications