ஜெயேந்திரர், விஜயேந்திரர்: நேருக்கு நேர் எப்போது?
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி கைதான பிறகு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் சந்திக்காமல் இருக்கும்ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் இன்னும் ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் வைத்து நேருக்கு நேர் சந்திக்கும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைதாகியுள்ளார். போலீஸ் விசாரணையின்போது விஜயேந்திரர் குறித்து அவர் மிகக்கடுமையான புகார்களை தெரிவித்ததாகக் கூறப்பட்டது. விஜயேந்திரர், அவரது தம்பி ரகு ஆகியோரால்தான் சங்கர மடத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டு விட்டதாகவும் அவர் கூறியதாகத் தெரிகிறது.
சமீபத்தில் போலீஸ் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணைக் காட்சிகள் அடங்கிய வீடியோ காட்சிகளை சன் டிவி வெளியிட்டது. அதிலும்விஜயேந்திரரையும், அவரது தம்பி ரகுவையும் ஜெயேந்திரர் மறைமுகமாக குற்றம் சாட்டுவதை அறிந்து கொள்ள முடிந்தது.
ஜெயேந்திரர் சிறையில் இருந்தபோது அவரை விஜயேந்திரர் சென்று பார்க்கவில்லை. இந் நிலையில் விஜயேந்திரரும் கடைசியாக கைதுசெய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
விரைவில் குற்றப்பத்திரிக்கை நகல் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ளது. குற்றப்பத்திக்கை நகல்வாங்குவதற்காக குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்திற்கு வர வேண்டும். ஒருவர் வராவிட்டாலும் கூட மற்றவர்களுக்குகுற்றப்பத்திரிக்கை வழங்கப்பட மாட்டாது.
எனவே குற்றப்பத்திரிக்கை நகல் வாங்க வரும்போது ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளக் கூடியவாய்ப்புகள் உள்ளன. இந்த சந்திப்பு இருவர் முகங்களிலும் ஏற்படுத்தப் போகும் உணர்வுகளை அறிந்து கொள்வதற்காக இப்போதே பெரும்எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications