தில் பாண்டியனுக்கும் குண்டாஸ்!
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் போலி குற்றவாளிகளாக ஆஜரான தில் பாண்டியன் மற்றும் செந்தில்குமார் ஆகியோரும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படவுள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் இதுவரை 10 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சுந்தரேச அய்யர், ரகு,கதிரவன், ரஜினி என்ற சின்னா, அம்பிகாபதி, மீனாட்சி சுந்தரம், மாட்டு பாஸ்கர், அனில்குமார், குமார், அனந்தகுமார் ஆகியோர்.
அப்பு அப்ரூவர் ஆவதற்காக போலீஸார் காத்துள்ளனர். அப்ரூவர் ஆகாவிட்டால் அவர் மீதும் குண்டர் சட்டம் பாயும் என்று தெரிகிறது.இதேபோல தில்பாண்டியன், செந்தில்குமார் ஆகியோர் மீது அடுத்தகட்டமாக குண்டர் சட்டம் பாயும் எனத் தெரிகிறது.
தில் பாண்டியனும், செந்தில்குமாரும் போலி குற்றவாளிகள் ஆவர். இவர்கள் சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தவர்கள்.இவர்களில் தில் பாண்டியன், சங்கரராமன் கொலை செய்யப்பட்டபோது சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தில் பாண்டியன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் இந்த வழக்கில் துப்பு துலங்கி ஜெயேந்திரர் உள்ளிட்ட அத்தனை பேரும்பிடிபட்டனர்.
தில் பாண்டியன், செந்தில்குமார் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடேசனிடம்போலீஸார் பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் விரைவில் இவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications