கலவை: குவியும் பக்தர்கள்- தினமும் கலெக்ஷன் ரூ. 20 லட்சம்!!
வேலூர்:
கடந்த 14 நாட்களாக கலவையில் தங்கியுள்ள ஜெயேந்திரரை சுமார் 50,000 பேர் சந்தித்து ஆசி பெற்றுள்ளதாக காஞ்சி மடத்தின்நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இவர்களில் பல விவிஐபிக்களும் அடங்குவர். வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் நிதி நெருக்கடியில் மடம் சிக்கியிருப்பதாகக்கூறப்பட்டாலும், ஜெயேந்திரரிடம் கலவையில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ. 20 லட்சம் வரை காணிக்கை அளிக்கப்படுவதாக அந்தமடத்தை கண்காணித்து வரும் உளவுப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயேந்திரர் தங்கியுள்ள அறையில் இரண்டு திரைகள் போடப்பட்டுள்ளன. காணிக்கைகளுடன் பக்தர்கள் வந்தால் இரண்டு திரைகளும்விலக்கப்பட்டு அவர்களை ஜெயேந்திரர் சந்திக்கிறார். மற்றபடி சும்மா வருபவர்களுக்கு ஒரு திரைக்குப் பின்னால் இருந்தபடி தான்ஜெயேந்திரர் ஆசி வழங்குகிறார்.
காணிக்கையாக வரும் நிதியைக் கொண்டு ஆசி பெற வரும் பக்தர்களுக்கு மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல மடத்தின் பிற செலவுகள் கவனிக்கப்படுகின்றன.
பெரும்பாலும் மெளன விரதத்திலேயே இருக்கும் ஜெயேந்திரர் பக்தர்களுடன் பேசுவதில்லை. ஆனால், சுப்பிரமணியம் சுவாமி உள்ளிட்டவிஐபிக்கள் வந்தபோது அவர்களுடன் சில வார்த்தைகள் பேசியிருக்கிறார்.
தினமும் காலை 9.30 மணிக்கு சந்திரமெளலீஸ்வரர் பூஜையை நடத்துகிறார். காலை 7.30 மணி முதல் 9 மணி வரையும், பகலில் 12.30 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும் ஜெயேந்திரர் பக்தர்களை சந்திக்கிறார்.
பல வெளிநாட்டு பக்தர்களையும் கலவையில் காண முடிகிறது. சென்னையிலிருந்து ரயில்கள் மூலம் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications