இந்தோனேஷியாவிலும் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்
ஜகார்த்தா:
![]() |
இந்தோனேஷியாவில் உள்ள சுலவேசி தீவில் இன்று அதிகாலை மிகச் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் உயிரிழப்பு ஏதேனும்ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
சுலவேசி தீவின் தலைநகர் பலூவிற்கு தெற்கே 16 கிமீ தொலைவில் அதிகாலை 3.10 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்அளவில் 6.2 ஆக இது பதிவானது. இதைத் தொடர்ந்து அந்தமானின் கிரேட்டர் நிக்கோபார் பகுதியிலும் சென்னையிலும் நில அதிர்வுகள்ஏற்பட்டன.
இது குறித்து இந்தோனேஷிய வானிலை மற்றும் நிலவியல் ஆய்வு மைய அதிகாரி சுடியோனோ கூறுகையில்,
இந்த நிலநடுக்கதினால் 8 கடைகள் சேதமடைந்துள்ளன. ஆனால் உயிரிழப்போ, காயமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 24 முறை அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டது. இவை ரிக்டர் அளவில் 3 முதல் 4 வரையில் பதிவாயினஎன்றார்.
கடந்த மாதம் 26ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து (9.0 ரிக்டர்) இந்தோனேஷியாவில் தொடர்ந்து நில நடுக்கம்ஏற்பட்ட வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பல கண்டத் திட்டுக்கள் இணையும் இடத்தில் இந்தோனேஷியா அமைந்திருப்பதால் அங்கு நில நடுக்கமும், எரிமலை வெடிப்புகளும்சகஜமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!













Click it and Unblock the Notifications