ஆடிட்டர் வழக்கிலும் கைதாகிறார் இளையவர்!
காஞ்சிபுரம்:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் விஜயேந்திரர் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.
இந்த வழக்கில் ஜெயேந்திரர் உள்பட 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் காண்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியம் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். போலீசாரிடம் இவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் இந்தத்தாக்குதலில் விஜயேந்திரருக்கும் தொடர்பிருப்பதாகக் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் விஜயேந்திரரையும் இந்த வழக்கில் கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் தனிப் போலீஸ் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.(இந்தத் தனிப்படை வட்டாரங்களை சுட்டிக் காட்டி சுந்தரேச அய்யர், ரகு ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைதாகப் போவதை நாம் பல நாட்களுக்கு முன்பேதெரிவித்தது நினைவிருக்கலாம்).
சங்கரராமன் கொலையைப் போலவே இந்த வழக்கிலும் விஜயேந்திரரை இரண்டாவது குற்றவாளியாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் 2 வாரங்களுக்கு காவல் நீடிப்பு:
இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரரின் காவல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஜயேந்திரரின் சிறைக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர்போலீஸ் வேனில் பலத்த பாதுகாப்புடன் காஞ்சிபுரம் கொண்டு செல்லப்பட்டார்.
முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது அவரது காவலை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தமராஜன்உத்தரவிட்டார்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications