மகாராஷ்டிரா: திருவிழா நெரிசலில் 45 பேர் பலி
சதாரா:
மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் நடந்த திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 45 பேர் பலியாயினர்.
வகி என்ற இடத்தில் மலைக் குன்றின் மீது அமைந்துள்ள மந்த்ராதேவி கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவையொட்டி இன்றுஆயிரக்கணக்கானவர்கள் கூடியினருந்தனர்.
கோவிலின் நுழைவு வாயில் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததையடுத்து சிலருக்கு லேசான ஷாக் அடித்தது.
இதையடுத்து கூட்டத்தினர் சிதறி ஓட ஆரம்பித்தனர். நுழைவு வாயில் மிகக் குறுகலாக இருக்க ஆயிரக்கணக்கான மக்கள் ஒருவரை மீறிஒருவர் ஓட முயன்றனர். இதில் ஏற்பட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானவர்கள் தடுமாறி விழுந்தனர். அவர்கள் மீது ஏறி, மிதித்தபடிகூட்டத்தினர் சிதறி ஓடினர்.
இந்த நெரிசலில் மிதிபட்டும் மூச்சு திணறியும் 45 பேர் பலியாகிவிட்டனர். இவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள். மேலும் 50பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications