ஜெ. சொத்து: மார்ச் 15ல் விசாரணை!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் மார்ச் 15ம் தேதி பெங்களூர் நீதிமன்றத்தில் தொடங்கும் என்றுகூறப்படுகிறது.

ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது அக்காள் மகள் இளவரசி, அக்காள் மகன் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்புவழக்கு சென்னை தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த விசாரணை கேலிக்கூத்தாக நடந்ததாகக் கூறியும், வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரியும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2003ம் ஆண்டு நவம்பர் மாதம், பெங்களூருக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்துவழக்கு தொடர்பான 8,000 பக்ககங்கள் கொண்ட ஆவணங்கள் பெங்களூருக்கு அனுப்பப்பட்டன.

அங்குள்ள சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதியும் நியமிக்கப்பட்டு விட்டார்.

வழக்கு தொடர்பான ஆவணங்களை மொழி பெயர்க்கும் பணி நடந்து வருகிறது. 3ல் 2 பங்கு ஆவணங்கள் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. இன்னும் ஓரு வாரங்களில் மீதள்ள ஆவணங்களும் மொழி பெயர்க்கப்பட்டு விடும் என்று தெரிகிறது.

இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக தேவராஜூ என்பவர் நியமிக்கப்பட இருக்கிறார். இவர் பெங்களூரில் வசிக்கும் திமுக தலைவர்கருணாநிதியின் மகள் செல்வி குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்கிறார்கள அதிமுக தரப்பில்.

ஆவணங்கள் மொழி பெயர்ப்பைத் தொடர்ந்து வழக்கு விசாரணை மார்ச் 15ம் தேதி வாக்கில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூர் நீதிமன்றத்திலிருந்து வேறு மாநில நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றக் கோரி முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுவிட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+